பொலன்னறுவ- ஹிங்குராகொட வீதியில் எதுமல்பிட்டிய என்ற இடத்தில் நேற்று பிற்பகல் 1.10 மணியளவில், லால் சிறிசேன ஓட்டிச் சென்ற லான்ட் குரூசர் வாகனம், உந்துருளி ஒன்றை மோதித் தள்ளியது. இந்த விபத்தில் உந்துருளியில் பயணம் செய்த சகோதரர்களான இருவர் உயிரிழந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய, லால் சிறிசேன, அந்த இடத்தில் நிற்காமல் தப்பிச் சென்று, சில மணிநேரம் கழித்து, காவல் நிலையத்தில் சரணடைந்தார்.
இதையடுத்து, அவரை பொலன்னறுவ பதில் நீதிவான் முன் நிறுத்தியபோது, அவரை செப்ரெம்பர் 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.
மைத்திரிபால சிறிசேனவின் சகோதரரான லால் சிறிசேன, பொலன்னறுவவில் மிகவும் பிரபலமான வர்த்தகராவார். இவர், 140 கி.மீ வேகத்தில் செலுத்திச் சென்ற வாகனமே விபத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புதினப்பலகை
மோட்டார் சைக்கிள் விபத்து, 2 பேர் பலி
========================================
பொலன்னறுவை- ஹிங்குரங்கொட வீதியில் பொலன்னறுவையிலிருந்து வந்த மோட்டார் சைக்கிள் அத்துமல்பிட்டிய எனும் இடத்தில் விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (09) அதிகாலை இடம்பெற்றுள்ளது. மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிள் வேறு ஒரு வாகனத்தில் மோதியதனால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. மற்ற வாகனம் விபத்தின் பின்னர் நிறுத்தாது பயணித்துள்ளதாகவும் பொலன்னறுவைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தப்பிச் சென்ற வாகனத்தின் சாரதியைக் கைது செய்யும் நடவடிக்கை பொலிஸாரினால் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
0 comments:
Post a Comment