ரஷ்யாவைச் சேர்ந்த 8-வயது சிறுமிக்கு ஏற்பட்ட வினோத நோயின் காரணமாக, அவரது இதயம் உடலுக்கு வெளியே துருத்திக்கொண்டு துடிப்பது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

ரஷ்யாவைச் சேர்ந்த விர்சாவியா போருன் என்ற சிறுமிக்கு பிறந்ததில் இருந்து இதயத்தில் பிரச்சனை இருந்து வந்துள்ளது. மருத்துவர்கள் சிறுமி இறந்துவிடுவதாக தெரிவித்தனர். ஆனால் அதைத்தாண்டி சிறுமி 8 வயது ஆகியும் தற்போது உயிருடன் இருக்கிறாள். மிகவும் சந்தோஷமாக மற்றும் திறமையான சிறுமியாக வளர்ந்துள்ளாள்.

ஆனால், நோயின் தாக்கத்தினால் அவள் இதயமானது உடலுக்கு வெளியே வந்து துடிக்கிறது. இதனால் அவள் மிக மிருதுவான உடை மட்டுமே அணிய வேண்டும். அனைவரையும் போல் நடக்கலாம். மற்ற மாணவர்களை போல் ஓட முடியாது. அவளது பெற்றோர் பல மருத்துவர்களை அணுகியும் சிறுமிக்கு ரத்த அழுத்தம் அதிகம் இருப்பதால் சிகிச்சையின் மூலம் சரி செய்ய முடியாது என தெரிவித்துள்ளனர். போருனின் தாய் தனது மகளுக்கு விரைவில் குணமடையும் என நம்பிக்கை இருப்பதாக கூறினார்.

போருன் தனது இதயம் வெளியே துடிப்பது போன்ற வீடியோவை சமூக ஊடகங்களில் பதிவு செய்துள்ளார். அது தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த அதிசய நோய் புதியதாக பிறக்கும் 1 மில்லியன் குழந்தைகளில் 6 பேருக்கு இருப்பது குறிப்பிடத்தக்கது.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top