நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்ட மாகாணசபை தேர்தல்
திருத்த சட்டமூலத்தில் சபாநாயகர் கையொப்பம்
நாடாளுமன்றத்தில்
நிறைவேற்றப்பட்ட மாகாணசபை தேர்தல்கள் திருத்த சட்டமூலத்தில்
சபாநாயகர் கரு
ஜெயசூரிய கையொப்பமிட்டுள்ளார்.
இந்த கையொப்பம்
நேற்று இரவு
9 மணியளவில் இடப்பட்டதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.
குறித்த
சட்டமூலம் கடந்த
புதன்கிழமை அன்று நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு
பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட்டது.
இந்த
நிலையில், குறித்த
சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதற்காக வீட்டில் குளித்துக்
கொண்டிருந்த பிரதி அமைச்சர் வசந்த சேனாநாயக்க
அவசரமாக நாடாளுமன்றத்துக்கு
அழைக்கப்பட்டார். சுகவீனம் காரணமாக நாடாளுமன்றத்துக்கு வராமல் இருந்த அமைச்சர் ரஞ்சித்
மத்தும பண்டாரவும்
அழைக்கப்பட்டிருந்தார்.
அதேநேரம்
நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிக்கா பிரேமசந்திர, அண்மையில்
பெற்றெடுத்த குழந்தையுடன் நாடாளுமன்றத்துக்கு
வருகை தந்திருந்தார் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை,
புதிய சட்டத்தின்
கீழ் சப்ரகமுவ,
வடமத்திய மற்றும்
கிழக்கு மாகாணசபைகளின்
தேர்தல்கள் ஒத்திவைக்கப்பட வாய்ப்புக்கள்
ஏற்படுத்தப்பட்டுள்ளன.
0 comments:
Post a Comment