ஜனாதிபதி தலைமையில்
சிரேஷ்ட பாடகர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு
65 வயதிற்கு
மேற்பட்ட சிரேஷ்ட
பாடகர்களுக்கான ஓய்வூதியக் கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு
ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்களின்
தலைமையில் நேற்று
(06) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.
இலங்கை
பாடகர்கள் சங்கத்தினால்
இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன்,
முதல் 40 ஓய்வூதிய
பெறுநர்களுக்கான காசோலைகளும், சான்றிதழ்களும்
ஜனாதிபதி அவர்களால்
இதன்போது வழங்கி
வைக்கப்பட்டது.
ஜனாதிபதி
மைத்ரிபால சிறிசேன
அவர்களின் வழிகாட்டலின்
கீழ் கலைஞர்களுக்கான
பல நலன்புரிச்
செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், பாடகர்களின்
பாதுகாப்பு நிதியத்திற்கு 250 இலட்ச ரூபா நிதி
ஜனாதிபதி அவர்களால்
அண்மையில் வழங்கப்பட்டிருந்தமை
குறிப்பிடத்தக்கது.
கடந்த
இரண்டரை வருட
காலத்திற்குள் கலைஞர்களின் நோய் நிலைமைகள், மரணங்கள்
உள்ளிட்ட சகல
சந்தர்ப்பங்களிலும் அவசியமான அனைத்து
ஒத்துழைப்புக்களையும் ஜனாதிபதி அவர்கள்
வழங்கி வைத்ததுடன்,
தமது ஆற்றல்கள்
மற்றும் திறமைகளினால்
நாட்டு மக்களை
மகிழ்வூட்டிய கலைஞர்களுக்கு உரிய மதிப்பையும் பாராட்டையும்
வழங்கி, கலைஞர்களின்
இறுதிக்காலம் துயரம் மிக்கதாக அமையாதவண்ணம் அவர்களுக்கான
நலன்புரி நடவடிக்கைகளை
மேற்கொள்ள தற்போதைய
அரசாங்கம் தயாராக
உள்ளதென்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
இலங்கை
பாடகர்கள் சங்கத்தின்
தலைவர் கீர்த்தி
பெஸ்குவல், செயலாளர் ஜானக்க விக்ரமசிங்க, பொருளாளர்
ரொஹான் டி
சில்வா உள்ளிட்ட
சங்க உறுப்பினர்களும்,
ஜனாதிபதியின் செயலாளர் ஒஸ்டின் பெர்ணாண்டோவும் இந்நிகழ்வில்
கலந்துகொண்டனர்.
இதனிடையே,
பாடகர் விஜித்
சில்வாவின் இரண்டரை வருட கால கலையுலக
வாழ்வின் பூர்த்தியை
முன்னிட்டு வெளியிடப்படும் அவரது சுயசரிதை உள்ளடங்கிய
நினைவு மலரும்
இதன்போது ஜனாதிபதி
அவர்களிடம் கையளிக்கப்பட்டது.
0 comments:
Post a Comment