உலகின் பணக்கார பெண்மணி
லில்லியன் பெட்டென்கார்ட் காலமானார்
உலக
செல்வந்தர்கள் பட்டியலில் 14-ம் இடத்தில் இருக்கும்
லில்லியன் பெட்டென்கார்ட்
(94) வயோதிகம் காரணமாக மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர்
அறிவித்துள்ளனர்.
போர்பஸ்
நிறுவனத்தின் அறிக்கையின்படி உலக செல்வந்தர்கள் பட்டியலில்
14-ம் இடத்தில்
இருந்தவர் லில்லியன்
பெட்டென்கார்ட். அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும்
நிறுவனத்தின் முதன்மை பங்குதாரராக இருந்த இவர்
உலகின் பணக்கார
பெண்மணியாக அறியப்பட்டார்.
இந்நிலையில்,
பாரீஸ் நகரில்
வசித்து வந்த
பெட்டென்கார்ட் வயோதிகம் காரணமாக நேற்று மரணமடைந்ததாக
அவரது குடும்பத்தினர்
அறிவித்துள்ளனர். கடந்த 2012-ம் ஆண்டுக்கு பின்னர்
அவர் பொது
நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாமல் தனது வீட்டில்
ஓய்வில் இருந்து
வந்துள்ளார்.
39.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புடைய
சொத்துக்களுக்கு பெட்டென்கார்ட் அதிபதியாக உள்ளதாக போர்பஸ்
இதழ் தெரிவித்திருந்தது
குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment