உயிரிழந்த
பொலிஸ் உத்தியோகத்தர் குடும்பத்திற்கு
புதிய
இல்லம் கையளிப்பு
ஜனாதிபதியின் பாதுகாப்பு பிரிவில் கடமையாற்றிய,
2015.09.10 ஆம் திகதி இடம்பெற்ற
திடீர் வாகன விபத்தில் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர் என்.பிரேமதாஸவின் குடும்ப
உறுப்பினர்களுக்காக கண்டி, திகன பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள புதிய இல்லம் ஜனாதிபதி மைத்ரிபால
சிறிசேன அவர்களால் உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தரின் குடும்ப உறுப்பினர்களிடம் நேற்று 8 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.
ஜனாதிபதி பாதுகாப்பு பிரிவிற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதி
பொலிஸ் மா அதிபர் எஸ்.எம்.விக்ரமசிங்கவின் வழிகாட்டலில் பிரிவின் சகோதர
உத்தியோகத்தர்களின் பங்களிப்பில் 22 இலட்ச ரூபா செலவில் குறித்த உத்தியோகத்தரின் திடீர் மரணத்தினால்
நிர்க்கதியாகிய குடும்ப உறுப்பினர்களுக்கு வழங்குவதற்காக இந்த இல்லம்
நிர்மாணிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி அவர்களின் ஆலோசனைக்கேற்ப மகாவலி அபிவிருத்தி
அதிகார சபையினால் இதற்கான காணி வழங்கப்பட்டுள்ளது.
புதிய இல்லத்தினை திறந்துவைத்த ஜனாதிபதி காலஞ்சென்ற பொலிஸ்
உத்தியோகத்தர் என். பிரேமதாஸவின் தந்தையாரான டீ.ஜீ. பிரேமதாஸ உள்ளிட்ட குடும்ப
உறுப்பினர்களுடன் சுமுகமாக உரையாடினார்.
ஜனாதிபதியின் வருகை காரணமாக அவ்விடத்திற்கு வருகை
தந்திருந்த பிரதேச மக்களுடன் ஜனாதிபதி சுமுகமாக உரையாடியதுடன், அவர்களால் முன்வைக்கப்பட்ட பிரச்சினைகள்
தொடர்பாகவும் தனது கவனத்தைச் செலுத்தினார்.
மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க மற்றும் ஜனாதிபதி
பாதுகாப்பு பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்களும் உத்தியோகத்தர்களும் நிகழ்வில் கலந்து
கொண்டனர்.
0 comments:
Post a Comment