முஸ்லிம்
காங்கிரஸின் பேராளர் மாநாட்டில்
ஏக தலைவராக
ஹக்கீம் மீண்டும் அங்கிகாரம்
முஸ்லிம் காங்கிரஸின் 28ஆவது பேராளர் மாநாடு, கண்டி, பொல்கொல்ல மஹிந்த ராஜபக்ஸ உள்ளக அரங்கில் இன்று (05)
நடைபெற்றது. இதன்போது,
கட்சியின் தலைவராக,
அமைச்சர் ரவூப் ஹக்கீம்
மீண்டும் அங்கிகரிக்கப்பட்டார்.
முஸ்லிம் காங்கிரஸின் தலைமையகமான தாருஸ்ஸலாத்தில், கடந்த வெள்ளிக்கிழமை (03) மாலை நடைபெற்ற கட்டாய உச்சபீடக் கூட்டத்தில்,
மீண்டும் கட்சித்
தலைவராகத் தெரிவுசெய்யப்பட்ட அமைச்சர்
ஹக்கீமின் தெரிவை அங்கிகரிக்கும் முகமாக, அங்கிருந்த பேராளர்கள் ஒருமித்த குரலில் அல்லாஹு அக்பர் தக்பீர்
முழங்கினர்.
பேராளர்களின் அங்கிகாரத்தை ஏற்றுக்கொண்ட அமைச்சர் ஹக்கீம்,
அக்கூட்டத்தில்
தெரிவுசெய்யப்பட்ட கட்சியின் பதவிநிலை அலுவர்களைப் பிரகடனம் செய்தார். அதில்,
கட்சியின் தவிசாளராக
ஏ.எல்.அப்துல் மஜீத், செயலாளராக
ஜனாதிபதி சட்டத்தரணி நிஸாம் காரியப்பர், பொருளாளராக எம்.எஸ்.எம்.அஸ்லம் ஆகியோரும், மேலும் ஏனைய பதவிநிலை அலுவலர்களும்
அறிவிக்கப்பட, பேராளர்கள் அந்த
நியமன்ங்களையும் அங்கிகரித்தனர்.
தொடர்ந்து, கட்சியின் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பரால் ஆண்டறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில்
பிரதானமாக, கட்சி
எதிர்நோக்கிய முக்கிய அரசியல் சவால்களும்
நெருக்கடிகளும் எடுத்துரைக்கப்பட்டன. முக்கியமாக, நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைச்
சட்டமூலம், முஸ்லிம்
சமூகத்தை பாதிக்கும் ஒன்று எனவும், அதன்போது அது சாணக்கியமாக எதிர்கொள்ளப்பட்டது என்றும் குறிப்பிடப்பட்டது.
அத்தோடு கட்சியின் ஸ்தாபகத்தலைவர் பிரதிநிதித்துவப்படுத்திய அம்பாறை நகரிலும்,
தற்போதைய தலைவர்
பிரதிநிதித்துவப்படுத்தும் கண்டி மாவட்டத்திலும், திட்டமிட்டு உருவாக்கப்பட்ட இன வன்முறைகள்,
முஸ்லிம் காங்கிரஸை
ஒடுக்குவதற்காகச் செய்யப்பட்ட சதி நடவடிக்கைகள் எனவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த ஒரு வருட காலத்தில், முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய பல்வேறு பிரச்சினைகளுக்கு
நிரந்தரமான தீர்வைப் பெற்றுக் கொடுப்பதில், பலத்த சவால்களை முஸ்லிம் காங்கிரஸ்
முகங்கொடுத்தது எனவும், எனினும் அவை வெற்றிகொள்ளப்பட்டன எனவும், செயலாளர் நிஸாம் காரியப்பர், மேலும் குறிப்பிட்டார்.
முஸ்லிம் காங்கிரஸின் இவ்வாண்டுக்கான நிர்வாகிகள் பட்டியல்
முஸ்லிம் காங்கிரஸின் 28ஆவது தேசிய பேராளர் மாநாடு, இன்று (05) இடம்பெற்ற போது, நடப்பு ஆண்டுக்கான கட்சி நிர்வாகிகளாக, பின்வருவோர் தெரிவுசெய்யப்பட்டனர்:
தலைவர்: ரவூப் ஹக்கீம்
தவிசாளர்: ஏ.எல்.எம் மஜிட்
சிரேஷ்ட பிரதித் தலைவர்: தாவுதார் நைனா முஹம்மட்
பிரதித் தலைவர் 01:
ஹாபீஸ் நஸீர் அஹமட்
பிரதித் தலைவர் 02:
யூ.டி.எம்.அன்வர்
பிரதித் தலைவர் 03: எச்.எம்.எம்.ஹரீஸ்
பிரதித் தலைவர் 04: எஸ்.எம்.ஏ.கபூர்
செயலாளர்: எம்.நிஸாம் காரியப்பர்
பொருளாளர்: எஸ்.எம்.எஸ்.அஸ்லம்
தேசிய ஒருங்கிணைப்புச் செயலாளர்: எம்.ஐ.எம்.மன்சூர்
மஜ்லிஸ் சூரா தலைவர்: மௌலவி ஏ.எல்.எம்.கலீல்
தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்: யு.எல்.எம்.முபீன்
தேசிய அமைப்பாளர்: சபீக் ரஜாப்தீன்
அரசியல் விவகாரப் பணிப்பாளர் : எம்.பி பாறூக்
சர்வதேச விவகாரப் பணிப்பாளர்: சட்டத்தரணி ஏ.எல்.எம் பாயிஸ்
ஒருங்கிணைக்கப்பட்ட அமைப்புகளுக்கான பணிப்பாளர்:
எம்.எஸ்.தெளபீக்
உலமா காங்கிரஸ் தலைவர்: மெளலவி எச்.எம் எம் இல்லியாஸ்
பிரதித் தவிசாளர்: என்.எம்.நயிமுல்லாஹ்
பிரதிச் செயலாளர்: மன்சூர் ஏ காதர்
மஜ்லிஸ் சூராவின் பிரதித் தலைவர்: எம்.சியாட்
பிரதி ஒருங்கிணைப்புச் செயலாளர்: ரகுமத் மன்சூர்
பிரதி தேசிய கொள்கை பரப்புச் செயலாளர்: அலி சாஹிர் மெளலானா
பிரதி தேசிய அமைப்பாளர்:
பைசால் காசிம்
அரசியல் விவகார ஒருங்கிணைப்புச் செயலாளர்: ஏ.எல்.எம்.நஸீர்
கல்வி விவகாரங்களுக்கான பணிப்பாளர்: எஸ்.எல்.எம் பழில்
சமூக சேவைகள், அனர்த்த முகாமைத்துவப் பணிப்பாளர்: ஆர்.எம்.அன்வர்
இளைஞர் மற்றும் வேலைவாய்ப்புப் பணிப்பாளர்: ஏ.எல் தவம்
0 comments:
Post a Comment