போராட்டம் நடத்திய மக்கள் மீது
இராணுவம் தாக்குதல்!
35 பேர் பலி! 100 க்கு மேற்பட்டோர் காயம்
சூடானில்
குடிசார் ஆட்சியை
ஏற்படுத்துமாறு கோரிப் போராட்டம் நடத்திய பொதுமக்கள்
மீது இராணுவம்
நடத்திய தாக்குதலில்
35 க்கு மேற்பட்ட
மக்கள் பலியாகியுள்ளனர்.
100 க்கு மேற்பட்டோர்
காயமடைந்துள்ளனர்.
தலைநகர்
கார்ட்டுனில் உள்ள இராணுவத் தலைமையகத்துக்கு முன்னால்
போராட்டம் நடத்திய
மக்கள் மீதே
இந்தத் தாக்குதல்
நடத்தப்பட்டுள்ளது.
சூடானில்
கடந்த ஏப்ரலில்
நடத்தப்பட்ட போராட்டங்களின் ஒரு கட்டத்தில் இராணுவப்
புரட்சி காரணமாக
ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
அரசதலைவர்
ஒமர் அல்
பசீர் பதவி
நீக்கம் செய்யப்பட்டார்.
புதிய அரச
தலைவராக பதவியேற்ற
ராணுவ தளபதியும்,
மக்களின் எதிர்ப்பு
காரணமாக பதவி
விலகினார். ஆயினும் குடிசார் ஆட்சி நிறுவப்படாததால்
மக்கள் போராட்டங்கள்
நடத்தப்பட்டு வருகின்றன.
0 comments:
Post a Comment