தெரிவுக்குழு முன்னிலையில்
காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி



உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களை ஆராயும் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் காத்தான்குடி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி முன்னிலையாகியுள்ளார். தற்போது அவரின் சாட்சியம் பதியப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த தெரிவுக்குழு நியமிக்கப்பட்டதிலிருந்து பல அரசியல்வாதிகளும் பிரமுகர்களும் தொடர்ச்சியாக ஒவ்வொரு அமர்விலும் சாட்சியம் வழங்கி வருகின்றனர்.

இதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாதுகாப்பு தரப்பினரை இவ்வாறு அழைத்து விசாரணைகள் மேற்கொள்வதால் இரகசியங்கள் பல வெளிவருவதாகவும் இவ்வாறான விடயங்களை வைத்து ஐக்கிய தேசிய கட்சி அரசியல் செய்ய முற்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

ஆகவே இவர்களை தெரிவுக்குழு முன்னிலையில் விசாரணை செய்வதற்கு அனுமதிக்க முடியாது எனவும் இந்த குழுவை கலைக்குமாறும் கோரியிருந்தார். அவ்வாறு செய்யவில்லை என்றால் அமைச்சரவைக் கூட்டங்களை கூட்டமாட்டேன் எனவும் எந்தவொரு அரசியல் நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றமாட்டேன் எனவும் தெரிவித்திருந்தார்.

இருப்பினும் இந்த தெரிவுக்குழு நாடாளுமன்றால் உருவாக்கப்பட்டது ஆகவே இதனை கலைக்குமாறு கூறுவதற்கு மைத்திரிக்கு உரிமை இல்லையென பிரதமர் ரணில் தெரிவித்திருந்தார்.

மைத்திரியின் பல கோரிக்கைகள் மற்றும் எச்சரிக்கைகளையும் மீறி இன்றுவரை தெரிவுக்குழு தனது செயற்பாட்டை மேற்கொண்டு வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.


இந்த நிலையில், இன்று தெரிவுக்குழுவில் சாட்சியமளித்த காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதிகாரியிடம் குழுவின் உறுப்பினர்கள் கேள்விகளை எழுப்பினர்.

கேள்வி - காத்தான்குடி பிரதேசத்திற்கு அதிகளவில் குறிப்பாக அரபு நாடுகளில் இருந்து சுற்றுலாப் பயணிகள் வருவார்களா?.

பதில் - ஆரம்ப காலத்தில் அப்படி வந்திருக்கலாம். சில முறை வந்து சென்றுள்ளனர்.

கேள்வி - காத்தான்குடியில் நான்கு மற்றும் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் இருக்கின்றவா?

பதில் - இல்லை.

கேள்வி - அப்படியானால், சாதாரண வாடி வீடுகள் தங்குவார்களா?

பதில் - ஆம்.

கேள்வி - இதற்கு முன்னர் சாட்சியமளித்தவர்கள். அரபு நாடுகளில் இருந்து அதிகளவில் சுற்றுலாப் பயணிகள் வருவதால், அரபு மொழியில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டதாக கூறினார்.

பதில் - அரபு மொழியில் பெயர் பலகைகள், நான் காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு செல்ல முன்னரே அந்த பிரதேசத்தில் இருந்தன. பெருமளவில் சுற்றுலாப் பயணிகள் வர மாட்டார்கள். ஒரு சிலர் வந்துள்ளனர். பெருமளவில் வருவதில்லை.

கேள்வி - காத்தான்குடி அரேபியர்கள் சுற்றுலா பயணம் வரும் இடமல்ல?

பதில் - இல்லை. காத்தான்குடி கடல் கொந்தளிப்பானது, அங்கு சுற்றுலாப் பயணிகள் வரும் அளவில் எதுவும் இல்லை. பல இடங்களில் அரபு, ஆங்கிலம், தமிழ் மூன்று மொழிகளில் பெயர் பலகைகள் இருக்கும். சிங்களத்தில் இருக்காது எனக் கூறியுள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top