தீவிரமடையும் கல்முனை விவகாரம்!
ரிசாத் பதியூதீன் விடுத்துள்ள அவசர கோரிக்கை
கல்முனையில்
தமிழ் - முஸ்லிம்
மக்கள் இரு
தரப்பாக ஆர்ப்பாட்டங்களில்
ஈடுபட்டு வருகின்றமை
மிகுந்த வேதனை
அளிப்பதாக முன்னாள்
அமைச்சர் ரிசாத்
பதியூதீன் தெரிவித்துள்ளார்.
உடனடியாக
ஆர்ப்பாட்டங்களை கைவிட்டு இரு தரப்பினும் அமைதியை
பேணுமாறு அவர்
கோரிக்கை விடுத்துள்ளார்.
நாடாளுமன்ற
அமர்வில் இன்று
கலந்து கொண்டு
உரையாற்றும் போது அவர் இந்த கோரிக்கையை
விடுத்துள்ளார்.
நாட்டில்
ஐ.எஸ்
பயங்கரவாதிகளின் தாக்குதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மிக
வேதனையில் உள்ளனர்.
இந்நிலையில் அரசியல் ரீதியான போட்டிகள் இருதரப்புக்கு
வேண்டாம்.
தமிழ்
தேசிய கூட்டமைப்பின்
தலைவர் சம்பந்தன்,
முஸ்லிம் காங்கிரஸ்
கட்சியின் தலைவர்
ரவூவ் ஹக்கீம்
இருவரும் இணைந்து
இதற்கு தீர்வு
காண வேண்டும்
எனவும் ரிசாத்
பதியூதீன் கோரிக்கை
விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment