கல்முனை தமிழ் பிரதேச சபை விவகாரம்!
அவசரமாக பிரதமரை சந்தித்த கூட்டமைப்பு
உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் வாக்குறுதி




கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்தை உடனடியாக தரமுயர்த்துவதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பிடம் வாக்குறுதியளித்துள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

இது தொடர்பான வாக்குறுதிகள் பலமுறை ரணிலால் வழங்கப்பட்டுள்ள நிலையில், இன்று மாவை சேனாதிராசா மற்றும் ஞா.சிறிநேசன் ஆகிய இருவரிடமும் ரணில் இந்த வாக்குறுதியை வழங்கியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இன்று நாடாளுமன்ற கட்டட தொகுதியில் நடந்த சந்திப்பின்போதே, குறித்த வாக்குறுதியை பிரதமர் ரணில் வழங்கினார்.

வரும் செவ்வாய்க்கிழமையோ, அல்லது அதற்கடுத்து வரும் செவ்வாய்க்கிழமையோ அமைச்சரவை கூட்டத்தில் இதற்கான அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிக்கவுள்ளதாகவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை கடந்த சில மாதங்களிற்கு முன்னர் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்க பிரதமர் தயாரானபோது, முஸ்லிம் காங்கிரஸ் அதை எதிர்த்தது.

இந்நிலையில் இம்முறை முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸை சேர்ந்த யாரும் அமைச்சரவையில் இல்லாத நிலையில், அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பிப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க வாக்குறுதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top