கண்டியில் சற்று பதற்றமான
நிலை!
டயர்கள் எரிப்பு
- ஞானசார தேரர் மீண்டும் கடும் எச்சரிக்கை
கண்டியில்
தற்போது பெருமளவு பிக்குமார் ஒன்றுகூடியமையினால் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
நான்கு
நாட்களாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அத்துரலிய ரத்ன தேரருக்கு ஆதரவாக
ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த
ஆர்ப்பாட்டத்தின் போது டயர்களை எரித்து பொது மக்கள் தமது எதிர்ப்பு
வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில்
சம்பவ இடத்திற்கு வந்த ஞானசார தேரர் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அசாத்
சாலி, ஹிஸ்புல்லாஹ் மற்றும் அமைச்சர் ரிஷாட்
பதியூதினை பதவி விலக்கவில்லை என்றால் பாரிய நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என
ஞானசார தேரர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காலக்கெடு
நிறைவடையவுள்ள நிலையில் இனியும் பொறுமையாக இருக்க முடியாது.
நாட்டை
பாதுகாக்க சிங்கள மக்கள் அனைவரும் ஒன்றினைய வேண்டும் என தேரர் அழைப்பு
விடுத்துள்ளார்.
0 comments:
Post a Comment