பாராளுமன்றத் தெரிவுக் குழுவிடம்
பணிவான ஒரு வேண்டுகோள்



பயங்கரவாத தாக்குதல் தொடர்பாகவும், நாட்டில் தற்போது நடைபெறுகின்ற மேலும் பல பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்கின்ற பாராளுமன்றத் தெரிவுக் குழுவினர் முக்கியமாக நாட்டின் நல்லிணக்கத்தில் பெரும்பான்மை சமூகத்துக்கு மத்தியில் சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற கருத்துக்களை வெளிப்படுத்திய

முக்கியமான அரசியல் பிரதிநிதிகளையும் மத குருமார்களையும் நீங்கள் விசாரித்து அது தொடர்பான உண்மையான தெளிவுகளை நாட்டில் வாழ்கின்ற அனைத்து மக்களுக்கும் தெளிவுபடுத்த வேண்டியது காலத்தின் தேவையும் மக்களின் விருப்பமாகும் காணப்படுகிறது.

அந்த அடிப்படையில் கீழே குறிப்பிடப்படுகின்ற நபர்களின் கருத்துக்களை தயவு செய்து முழுமையான விசாரணைகளை நடத்தி தெளிவுகளை மக்கள் மயப்படுத்துமாறு வேண்டுகோள் விடுக்கப்படுகின்றது.

விஜேதாச ராஜபக்ஷவின் அன்றைய(18/11/2016) பாராளுமன்ற உரையில் ஐஎஸ் பயங்கரவாதிகள் தொடர்பாக சொல்லப்பட்ட விடயங்களை அவருக்கு எவ்வாறு தகவல் கிடைத்தது என்று முழுமையாக ஆராய்ந்து அது தொடர்பான தகவல்களை வெளிப்படுத்த வேண்டும்

விமல் வீரவன்சவின் கருத்துக்கள் சர்வதேச சமூகத்தையும் ,முஸ்லிம் அமைச்சர்களையும் குற்றம் சாட்டுகின்ற குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக ஆராயப்பட வேண்டும்

எஸ்பி திசாநாயக்கவின் முஸ்லிம் அரசியல் தலைமைகள் மீதான குற்றச்சாட்டு தொடர்பாக ஆராய்தல் வேண்டும்

குருநாகல் கலவரத்தின்போது அந்த களத்தில் காணப்பட்ட பாராளுமன்ற உறுப்பினரை தயா ஸ்ரீயை விசாரித்து அது தொடர்பான உண்மையை வெளிப்படுத்த வேண்டும்

குருணாகலில் காணப்பட்டு நாட்டில் பல சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் வெளிப்ஸபடுத்திய நாமல் குமாரை விசாரித்து அது தொடர்பான உண்மைகளை தெளிவுபடுத்த வேண்டும்

பொது ஜன பெரமுன கட்சியின் அங்கத்தவரும் உதய கம்மன்பில கட்சியின் உறுப்பினருமான குருநாகல் கலவரத்தின்போது காணப்பட்ட அரவிந்தன் தொடர்பாக விசாரித்து அது தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்

வைத்தியர் சாவியின் குற்றச்சாட்டுக்களில் தொடர்புடைய பொலீஸ் அதிகாரியை விசாரித்து அந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும்

நிரூபிக்கப்படாத குற்றச்சாட்டுக்கு உள்ளாக்கப்பட்ட வைத்தியர் சாவியையும் நேரடி விசாரணை செய்து அவர் பக்க நியாயங்களை மக்கள் மயப்படுத்த வேண்டும்

அண்மையில் நடைபெற்ற கலவரங்களின்போது பொறுப்பு அதிகாரிகளாக இருந்த பொலீஸ், இராணுவத் தளபதிகளை, விசாரித்து அது தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்

ஐஎஸ் பயங்கரவாதம்
தொடர்பாகவும் ,கண்டியில் திருவிழா நடைபெறும் என்று கருத்து வெளியிட்ட ஞானசார தேரரை விசாரித்து அவரின் பல கருத்துக்களில் புதைக்கப்பட்ட உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்

அதுரலிய ரத்ன தேரரின் ஊடக அறிக்கைகளை விசாரித்து அது தொடர்பாக தெளிவுபடுத்த வேண்டும்

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நபர்களை விசாரிப்பதன் மூலம் முழு சமுதாயமும் இவர்களால் வெளியிடப் பட்ட அறிக்கைகள் நல்லிணக்கத்துக்கு மக்களிடையே சந்தேகத்தை ஏற்படுத்துகின்ற கருத்துகளுக்கு தெளிவு கிடைப்பதோடு

பெரும்பான்மை சிறுபான்மை மக்கள் இடையில் பாரிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கு ஒரு பாதையாக இவர்களில் விசாரணை அமையும் என்பது மட்டுமில்லாமல் சிறுபான்மை சமூகத்தின் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் தொடர்பான உண்மைத் தன்மையை முழு உலகம் அறியக்கூடியதாக இருக்கும்

இதற்காக பாராளுமன்ற தெரிவுக்குழுவுக்கு முஸ்லிம் அரசியல் தலைவர்கள் அழுத்தங்களை கொடுக்க வேண்டியது உங்களது கடமையாகும்.

*குறிப்பு- இந்த செய்தி உரிய பாராளுமன்றத் தெரிவுக் குழு உறுப்பினர்களுக்கு கிடைப்பதற்கு அதிகமாக அனைவரும் பகிர்ந்து கொள்வது சிறந்தது.

(please share every body)

மருதூர் ஸக்கீ செய்ன்

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top