“கோரிக்கை
நிறைவேறும்வரை
என் உயிரை
கொடுத்தாவது
பெற்றுக்கொடுப்பதே
எனது இலக்கு.”
ரன்முத்துகல
சங்கரத்தின தேரர்
அம்பாறை
மாவட்டம் கல்முனை
வடக்கு தமிழ்
பிரதேச செயலகத்தை
தரமுயர்த்துமாறு கோரி மேற்கொள்ளப்பட்டுவரும்
சாகும்வரையான உண்ணாப் போராட்டம் இன்றும் முன்றாவது
நாளாக தொடர்கிறது.
இந்த
நிலையில், உண்ணாப்
போராட்டத்தில் ஈடுபட்டுவரும் போராட்டக்காரர்களின்
உடல்நிலை மோசமாகிவருவதால்
விளைவு மேலும்
விபரீதமாகும் என்று அவர்களால் எச்சரிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக
தமது கோரிக்கைகளை
சரியாக ஏற்றுகொண்டு
அதற்குரிய தீர்வினைப்
பெற்றுத்தர அரசாங்கமும் ஆட்சியாளர்களும்
தாமதத்தினை ஏற்படுத்துவார்களாயின் பெரும்
விளைவினை சந்திக்க
நேரிடும் என
கடும் எச்சரிக்கை
விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள பௌத்த தேரரான சங்கைக்குரிய
கல்முனை சுபத்திரா
ராமய விகாராதிபதி
ரன்முத்துகல சங்கரத்தின தேரர் குறிப்பிடுகையில், “கல்முனை மக்களின் நியாயமான கோரிக்கைகளுக்காக
பௌத்த மதகுரு
என்ற வகையில்
இப் போராட்டத்தை
முன்னெடுத்துவருகின்றேன். எமது கோரிக்கை
நிறைவேறும்வரை நான் என் உயிரை கொடுத்தாவது
பெற்றுக்கொடுப்பதே எனது இலக்கு.”
என்றார்.
0 comments:
Post a Comment