தேரர் “போராட்டத்தை ஆரம்பிக்க முன்னதாக,
ஜனாதிபதியைச் சந்தித்து,
கலந்துரையாடியிருக்க வேண்டும்
உண்ணாவிரதத்தை கண்டுகொள்ளாத ஜனாதிபதி
அமைச்சர்
றிசாத் பதியுதீன்,
மேல் மாகாண
ஆளுநர்
அசாத் சாலி,
கிழக்கு மாகாண
ஆளுநர் ஹிஸ்புல்லா
ஆகியோரை பதவி
நீக்கம் செய்யக்
கோரி, அத்துரலியே
ரத்தன தேரர்
தலதா மாளிகைக்கு
முன்பாக நடத்தி
வரும் உண்ணாவிரதப்
போராட்டத்தில் தலையீடு செய்யும் எண்ணம் ஜனாதிபதிக்கு
இல்லை என்று
ஜனாதிபதி செயலக அதிகாரி ஒருவர்
தெரிவித்துள்ளார்.
“போராட்டத்தை
ஆரம்பிக்க முன்னதாக,
அத்துரலியே ரத்தன தேரர் ஜனாதிபதியைச் சந்தித்து,
முதலில் கலந்துரையாடியிருக்க
வேண்டும்.
அவர்
அவ்வாறு செய்யாத
நிலையில், இந்த
விடயத்தில் இப்போதைக்குத் தலையிடும் எண்ணம் ஜனாதிபதிக்கு
இல்லை” என்றும்
அந்த அதிகாரி
குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை,
“ஜனாதிபதியிடம் கோரிக்கைகளை முன்வைத்தே இந்தப் போராட்டம்
நடத்தப்படுவதால், தாம் தலையீடு செய்ய விரும்பவில்லை
என்றும், எனினும்
செவ்வாயன்று அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த விவகாரத்தை எடுத்துச்
செல்வேன் எனவும்
புத்தசாசன அமைச்சர்
காமினி ஜெயவிக்ரம
பெரேரா, கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment