துப்பாக்கி
பிரயோகத்தில்
உயிரிழந்த
சந்தேக நபர்
தென்னிலங்கையில்
சம்பவம்
தென்னிலங்கையில்
இன்று அதிகாலை
பொலிஸாருக்கும் சந்தேக நபர் ஒருவருக்குமிடையில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளதாகவும் இதில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துளனர்.
தேடப்பட்டுவந்த
சந்தேக நபரை
அக்குரெஸ்ஸ பிரதேசத்தில் கைதுசெய்ய முற்பட்டபோது இடம்பெற்ற
துப்பாக்கிச் சண்டையின்போதே குறித்த நபர் பொலிஸாரின்
துப்பாக்கிச் சுட்டில் கொல்லப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.
கடந்த
மாதம் 22ஆம்
திகதி அக்குரெஸ்ஸ
பிரதேசத்தில் பொலிஸ் சுற்றிவளைப்பின்போது
பொலிஸார் மீது
துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டது. இதன்போது ஒரு
பொலிஸ் உத்தியோகத்தர்
பலியானார். ஆனாலும் சந்தேக நபர் தப்பிச்
சென்றிருந்தார்.
இந்த
நிலையில் குறித்த
சந்தேகியை பல
கடந்த நாட்களாக
தேடிவந்த பொலிஸார்
இன்று அதிகாலை
2.30 மணியளவில் கிடைத்த தகவலுக்கமைய அக்குரெஸ்ஸ பகுதியில்
குறித்த சந்தேகியைக்
கைதுசெய்ய முற்பட்டனர்.
இதன்போது
குறித்த சந்தேகி
பொலிஸார் மீது
தாக்குதலைத் தொடுத்துள்ளார். பதிலுக்கு பொலிஸாரும் தாக்கியதால்
குறித்த சந்தேகி
அவ்விடத்திலேயே சுட்டுக் கொல்லப்பட்டார்.
கொல்லப்பட்டவர்
56 வயதினையுடையவர் என பொலிஸ்
ஊடகப்பேச்சாளர் கூறியுள்ளார்.
0 comments:
Post a Comment