8ஆவது நாடாளுமன்றத்தின்
எதிர்க்கட்சித் தலைவரானார் சம்பந்தன்


8ஆவது நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் நியமிக்கப்படுவதாக சபாநாயகர் கரு ஜெயசூரிய அறிவித்தார்.
 எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
8 ஆவது நாடாளுமன்றத்தின் அமர்வு இன்று காலை 9.30 மணிக்கு ஆரம்பமானது. எதிர்க்கட்சித் தலைவரைத் தீர்மானிக்கும் முக்கிய அமர்வாகக் கருதப்பட்ட இந்த அமர்வில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி எவரையும் பெயரிடவில்லை.
இதனால் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் போட்டியின்றித் தெரிவு செய்யப்பட்டார். இதன்மூலம் இலங்கையில் இரண்டாவது தடவையாக சிறுபான்மை இனத்தவர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

முன்னர் தமிழர் விடுதலைக் கூட்டணியின் அமிர்தலிங்கம் எதிர்க்கட்சித் தலைவராகத் செயற்பட்டிருந்த போதும் புதிய அரசியல் மாற்றத்தின் பின்னர் சிறுபான்மை இனத்தவர் ஒருவர் எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்பது இதுவே முதல் தடவையாகும்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top