உலகில் இந்த
பச்சிளம் குழந்தைக்கு
இடமில்லாமல் போனதே!
துருக்கி
கடற்கரையில் ஒதுங்கிய சிரியாவைச் சேர்ந்த குழந்தையின்
உடலும், அதை
கையிலேந்திச் சென்ற பொலிஸும் அடங்கிய
புகைப்படம், இணைய உலக மக்களின் கண்ணீருக்கு
காரணமாகியிருக்கிறது.
வாழ்க்கைப்
பயணத்தை ஏதேனும்
ஒரு நாட்டில்
தொடர சிரியாவிலிருந்து
கடல் வழியாக
சென்று கொண்டிருந்த
படகு ஒன்று
கிரீஸ் தீவு
அருகே கவிழ்ந்த
விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். இதில் 5 குழந்தைகளும்
அடங்குவர்.
அந்த
5 குழந்தைகளில் கரை ஒதுங்கிய 3 வயது சிறுவனின்
உடலை ஐரோப்பிய
கடற்படை பொலிஸார் மீட்டனர். அப்போது
அங்கிருந்த மனித உரிமை கண்காணிப்புக் குழு
அதிகாரி அந்தச்
சிறுவனின் உடலை
படம் எடுத்தார்.
படத்தை எடுத்தது
தனது பணியின்
ஒரு பகுதிதான்
என்றாலும், அந்தப் படம் அவரது மனதை
கணக்கச் செய்தது.
இந்தப் படத்தை
ஆழ்ந்த சிந்தனைக்கு
பிறகே அந்த
அதிகாரி தனது
ட்விட்டர் பக்கத்தில்
பகிர்ந்தார்.
ஐரோப்பிய
எல்லையையும் தாண்டி, மக்களின் மனதை கசியச்
செய்த 2-ம்
உலகப் போரில்
பெரிய அளவில்
மனித உயிர்கள்
இழக்கநேர்ந்த அதே உணர்வை இந்தப் படம்
ஏற்படுத்தும் என அந்த அதிகாரி நினைத்தார்.
மிகவும்
பிரபலமான துருக்கி
கடற்கரையின் மண்ணில் முகத்தை புதைத்த அந்த
இறந்த குழந்தையின்
படம், இந்த
உலகில் அந்த
குழந்தைக்கு இடமில்லாமல் போனது என்பதை குறிப்பிடவே
நினைத்தார் அவர்.
தற்போது
இந்தப் புகைப்படம்
வாழ்வற்றுப்போனதின் அடையாளமாக சர்வதேச
அளவில் பகிரப்பட்டு
#Syrianlivesmatter என்ற ட்ரெண்டிங்கில்
நிற்கிறது. பல நாட்டு பத்திரிகைகளும் இந்தப்
படத்தை தங்களது
அட்டைப் படமாக
வைத்துள்ளனர்.
0 comments:
Post a Comment