முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க
இந்திய விஜயத்தின்போது
நீண்டகாலமாகத்
தீர்க்கப்படாத பிரச்சினைகளின் உச்சநிலை வெளிப்பாடே பயங்கரவாதம்
எனத் தெரிவித்துள்ள
முன்னாள் ஜனாதிபதி
சந்திரிகா பண்டாரநாயக்க
குமாரதுங்க, அனைவரையும் உள்வாங்கியதும் நிலைத்திருக்கக்கூடியதுமான அபிவிருத்தியே, அவ்வாறான
முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கான முக்கிய வழி எனவும்
தெரிவித்துள்ளார்.
டில்லியில்
இடம்பெற்ற 'முரண்பாட்டுத் தவிர்ப்புக்கும்
சுற்றுச்சூழல் விழிப்புணர்வுக்குமான பூகோள
இந்து - பௌத்த
முன்னெடுப்பு' என்ற மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத்
தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.
இந்த மாநாட்டை,
சர்வதேச பௌத்த
சம்மேளனம், டோக்கியோ அறக்கட்டளை ஆகியவற்றுடன் இணைந்து,
விவேகானந்தா சர்வதேச அறக்கட்டளை ஏற்பாடு செய்திருந்தது.
இந்தியப்
பிரதமர் நரேந்திர
மோடி இந்த
மாநாட்டைத் தொடக்கி வைத்ததோடு, இந்துமத அறிஞரான
ஸ்ரீ ஸ்ரீ
இரவிசங்கர், சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் தலைவர்
லாமா லொப்சாங்,
ஜப்பான், மியான்மார்,
பூட்டான், நேபாளம்
ஆகியவற்றிலிருந்து சிரேஷ்ட அமைச்சர்களும்
கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது
மேலும் கருத்துத்
தெரிவித்த முன்னாள்
ஜனாதிபதி, அனைத்துச்
சமூகங்களையும் ஒன்றாக நடத்துவது மிகவும் முக்கியமானது
எனத் தெரிவித்தததோடு,
முரண்பாட்டைத் தீர்ப்பதற்கு, அம்முரண்பாட்டினைத்
தோற்றுவித்த காரணங்களைத் தீர்ப்பதைப் பற்றிய பேச்சுவார்த்தைகள்
இடம்பெற வேண்டுமெனவும்
தெரிவித்தார்
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இந்திய விஜயத்தின்போது
இந்திய பிரதமர் நரேந்திர மோடி, வெளியுறவு அமைச்சர் (Sushma Swaraj) சுஸ்மா சுவராஜ் ஆகியோரைச்
சந்தித்தபோது....
0 comments:
Post a Comment