கிழக்கு முதலமைச்சர்
கடற்படை அதிகாரியை தூற்றியமை
முறைப்பாடுகள் செய்யப்பட்டால் விசாரணை நடத்தப்படும்
கிழக்கு
மாகாண முதலமைச்சர்
நஸீர் அஹமட்,
கடற்படை அதிகாரி
ஒருவரை தூற்றியதாக
தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் முறைப்பாடு எதுவும்
தமக்கு கிடைக்கவில்லை
என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு
செயலாளர் கருணாசேன
ஹெட்டியராச்சி கொழும்பின் ஊடகம் ஒன்றுக்கு இதனை
தெரிவித்துள்ளார்.
சம்பூர்
மகாவித்தியாலயத்தில் கடந்த வெள்ளிக்கிழமையன்று
முதலமைச்சர், கடற்படை அதிகாரி ஒருவரை அந்த
இடத்தில் இருந்து
அகன்று செல்லுமாறு
தூற்றிய காணொளி
இணையங்களில் பரப்பப்பட்டுள்ளது.
முக்கியஸ்தர்களுக்கான
மரியாதை விடயமே
இதற்கு காரணம்
என்று கூறப்படுகிறது.
இந்நிலையில்
குறித்த காணொளியை
தாம் பார்த்ததாக
குறிப்பிட்டுள்ள ஹெட்டியாராச்சி, முறைப்பாடுகள்
செய்யப்பட்டால் அது தொடர்பில் விசாரணை நடத்தப்படும்
என்றும் தெரிவித்துள்ளார்
இந்த
சம்பவம் இடம்பெற்ற
வேளையில் கிழக்கு
மாகாண ஆளுநர்
ஒஸ்டின் பெர்ணான்டோ
மற்றும் அமரிக்க
தூதுவர் அடுல்
கெசாப் ஆகியோர்
பிரசன்னமாகியிருந்தனர்.
பாடசாலை
மாணவர்களுக்கு நூல்களை வழங்கும் இந்நிகழ்வின்போது ஊடகவியலாளர்கள், மேடையை சூழ்ந்திருந்தனர்.
இதன்போது
அவர்களை ஒதுங்கி
மாணவர்களுக்கு இடம்தருமாறே குறித்த கடற்படை அதிகாரி
கோரியுள்ளார்.
எனினும்,
இதனை தமக்கு
குறித்த கடற்படை
அதிகாரி கூறுவதாக
நினைத்தே கிழக்கு
முதலமைச்சர் அவரை தூற்றியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment