மலையக பிரதேசங்களில் பாரிய மண்சரிவு
- போக்குவரத்து பாதிப்பு

வாகனங்களை கவனமாக செலுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள்


 போகாவத்தை - இராவணாகொட பிரதான பாதையில் நேற்று இரவு ஏற்பட்ட மண்சரிவு மண்சரிவு காரணமாக தலவாக்கலை மற்றும் நாவலப்பிட்டி பகுதிக்கான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருப்பதாக அறிவிக்கப்படுகின்றது.
தற்போது மலையகத்தில் காணப்படும் சீரற்ற காலநிலை காரணமாக தலவாக்கலை, இராவணாகொட பிரதான பாதையின் அருகே ஆங்காங்கே பல இடங்களில் சிறிய மற்றும் பாரிய மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது..
18.05.2016 அன்று காலை பெக்கோ இயந்திரத்தை பயன்படுத்தி மண்சரிவை அகற்றியதன் பின் போக்குவரத்து வழமைக்கு திரும்பியதாக திம்புள்ள - பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வாகனங்கள் தங்குதடையின்றி பயணிக்க கூடிய நிலை காணப்பட்டாலும் பாதையில் முகில் கூட்டம் அதிகமாக காணப்படுவதினால் வாகன போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் போக்குவரத்து பொலிஸார் வாகனங்களை கவனமாக செலுத்துமாறும்  கேட்டுள்ளனர்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top