பேஸ்புக் வலைத்தள கணக்கிலும்
மஹிந்தவை தோற்கடித்திருக்கும் மைத்திரி



ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன காலியில் இடம்பெற்ற  மேதின கூட்டத்தில் அதிக ஜனத்திரளைக்காட்டி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை தோற்கடித்தது போன்று பேஸ்புக் வலைத்தள கணக்கிலும்  தோற்கடித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பேஸ்புக் வலைத்தள கணக்கில் மஹிந்த ராஜபக்ஸவை விட அதிகளவான விருப்பங்கள் (Likes) கிடைத்துள்ளன.
மைத்திரிபால சிறிசேன 9 லட்சத்து 67 ஆயிரத்து 761 Likes பெற்றுள்ளார். இதேவேளை மஹிந்த ராஜபக்ஸ 9 லட்சத்து 49 ஆயிரத்து 337 Likes பெற்றுள்ளார்.

இதனடிப்படையில் மைத்திரிபால சிறிசேன, மஹிந்த ராஜபக்ஸவை விட 18 ஆயிரத்து 424  Likes பெற்று முன்னிலையில் உள்ளார்.




0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top