நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற குழப்ப நிலை
பாலித்த, பிரசன்னவுக்கு எதிராக
கடுமையான ஒழுக்காற்று
நடவடிக்கை
நாடாளுமன்றத்தில்
இடம்பெற்ற குழப்ப
நிலை தொடர்பில்
ஐக்கிய தேசிய
கட்சியின் பிரதி
அமைச்சர் பாலித்த
தேவரப்பெரும மற்றும் ஐக்கிய மக்கள் சுதந்திர
கூட்டமைப்பின் பிரசன்ன ரணவீரவுக்கு எதிராக மேற்கொள்ளக்
கூடிய உயரிய,
ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என
சபாநாயகர் கரு
ஜெயசூரியவுக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்றையதினம்,
முன்னாள் ஜனாதிபதி
மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு
தொடர்பில் பீல்ட்
மாஷல் சரத்
பொன்சேகா கருத்து
வௌியிட்ட வேளை,
ஒன்றிணைந்த எதிர்க்கட்சியினர் சிலர் கூச்சலிட்டமையால், நாடா ளுமன்றத்தில் அமைதியின்மை ஏற்பட்டது.
இந்தநிலையில்,
இதனுடன் தொடர்புடைய
நாடாளுமன்ற உறுப்பினர்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை
சமர்ப்பிக்குமாறு சபாநாயகர் கரு ஜெயசூரியவால் குழுவொன்று
அமைக்கப்பட்டது.
குறித்த
குழுவின் அறிக்கை
இன்று சபாநாயகரிடம்
கையளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற
உறுப்பினர்களான தினேஷ் குணவர்த்தன, பந்துல குணவர்த்தன
மற்றும் பியல்
நிஷாந்த ஆகியோர்
நாடாளுமன்ற தலைமைக்கு செவிமடுக்காது செயற்படுவதாகவும் அதில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது
0 comments:
Post a Comment