நாடாளுமன்ற மோதல் விவகாரம் :
அறிக்கை
சபாநாயகரிடம் கையளிப்பு
நாடாளுமன்றத்தில் நேற்ற இடம்பெற்ற கைக்கலப்பு தொடர்பான
விசாரணை அறிக்கை சற்று முன்னர் சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவின் பாதுகாப்பு
குறித்து, பிராந்திய அபிவிருத்தி
அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவினால் தெரிவிக்கப்பட்ட சில கருத்துக்கள்
காரணமாகவே நேற்று நாடாளுமன்றில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளது.
இதன்போது, ஐக்கிய தேசியக் கட்சியின் கேகாலை மாவட்ட உறுப்பினர் சந்தித் சமரசிங்க
வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
நாடாளுமன்ற மோதல் தொடர்பான விசாரணைகளை கொழும்பு குற்றத்
தடுப்பு பிரிவினர் முன்னெடுக்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதனடிப்படையில், சம்பவம் தொடர்பான வாக்குமூலங்களையும் தற்போது குற்றத்
தடுப்பு பிரிவினர் பெற்றுக் கொள்ளும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment