அரச ஊழியர்களின் விடுமுறைகள் ரத்து!
உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் அறிவிப்பு
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை
காரணமாக பாதிக்கப்பட்டுள்ள
மக்களுக்கு நிவாரணங்களை வழங்க தேவையான நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும்
என்பதால், அரச
ஊழியர்களின் விடுமுறைகள் ரத்துச் செய்யப்பட்டுள்ளதாக உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர
அபேவர்தன தெரிவித்துள்ளார்.
அனர்த்த
நிலைமை
முடிவுக்கு
வரும்
வரையில்
இது
அமுலில்
இருக்கும்
எனவும்
அமைச்சர்
மேலும்கூறியுள்ளார்.
தனது அமைச்சில்
இன்று நடைபெற்ற
ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
நிவாரணம் வழங்கும்
நடவடிக்கைகளில் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் சேவையானது
சரியாக முன்னெடுக்கப்படவில்லை
என்றால், அது
குறித்து 1905 என்ற இலக்கத்துடன் தொடர்பு
கொண்டு அறியத்
தருமாறும் அமைச்சர்
பொது மக்களிடம்
கேட்டுள்ளார்.
ஜனாதிபதி மற்றும்
பிரதமரின் ஆலோசனைக்கு
அமைய நிவாரண
சேவைகளை முன்னெடுக்க
அரசாங்கம் நடவடிக்கை
எடுத்துள்ளதாகவும் வஜிர அபேவர்தன
குறிப்பிட்டுள்ளார்.

0 comments:
Post a Comment