பாதி குளத்திலும் பாதி நிலத்திலும்
இருக்கும் வீடு!
அமெரிக்காவின் ஓக்லஹோமாவில் பால் பிலிப்ஸ் வித்தியாசமான
வீட்டைக் கட்டியிருக்கிறார். பாதி வீடு நிலத்திலும், பாதி வீடு குளத்திலும் இருக்குமாறு
கட்டியிருக்கிறார். ‘‘மீன் பிடிப்பது
என்னுடைய முக்கியமான பொழுதுபோக்கு. வீட்டுக்குள் அமர்ந்துகொண்டே மீன் பிடிக்க
வேண்டும் என்பது என் நீண்ட கால ஆசை. ஒருமுறை ஏரியில் மீன்
பிடித்துக்கொண்டிருந்தபோது, என்னை மீன் பிடிக்க விடாமல் தடுத்தனர். அதனால் சொந்தமாக ஒரு குளம் உருவாக்கி,
மீன் பிடிக்க வேண்டும்
என்று முடிவு செய்தேன். நிலத்தை வாங்கி, 2014-ம் ஆண்டு வேலையை ஆரம்பித்தேன். 1850 சதுர அடியில் வீட்டைக்
கட்டி முடித்தேன்.
பாதி குளத்திலும் பாதி நிலத்திலும் இருக்கும் வீடு விரைவில்
பிரபலமாகிவிட்டது. தொலைக்காட்சிகளில் செய்தி வந்தவுடன் உலகம் முழுவதும்
தெரிந்துவிட்டது. என் வீட்டிலிருந்து குளத்தில் இறங்கி மீன் பிடிக்க வேண்டிய
அவசியமில்லை. வீட்டுக்குள் தரையில் இருக்கும் ஒரு கதவைத் திறந்தால் கீழே குளம்.
வசதியாக அமர்ந்துகொண்டு வெயில், மழை பற்றிக் கவலைப்படாமல் மீன் பிடிக்கலாம். தினமும் ஏராளமான மீன்களைப்
பிடித்து வருகிறேன்’’ என்கிறார்
பிலிப்ஸ்.
0 comments:
Post a Comment