லண்டன் மேயராக பதவியேற்கும்
முதல் முஸ்லிம்
லண்டனின் மேயராக சாதிக் கான் ( வயது 45) என்ற முஸ்லிம் ஒருவர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பாஸ் சாரதியின் மகனான இவர் இதன்மூலம் லண்டனில் முதல் முஸ்லிம் மேயர் என்ற பெருமையை பெற்றுள்ளார்,
இங்கிலாந்து
நாட்டில் உள்ள
மாகாணங்களுக்கான பிரதிநிதிகள் தேர்தல் மற்றும் சில
நகரங்களுக்கான மேயர் பதவிகளுக்கான தேர்தல் சமீபத்தில்
நடந்தது. இதில்,
லண்டன் நகர
மேயர் பதவிக்கான
தேர்தலில் பிரபல
கோடீஸ்வரர்கள் பலரும் போட்டியிட்டனர்.
பாகிஸ்தானை
சேர்ந்த பஸ்
சாரதியின் மகனான
சாதிக் கான் (45) என்பவர் தொழிலாளர் கட்சி
வேட்பாளராக போட்டியிட்டார். இந்த தேர்தலில் சுமார்
11 லட்சம் மக்கள்
வாக்களித்தனர். ஐம்பது சதவீதத்துக்கும் அதிகமாக வாக்குகள்
பெற்ற சாதிக் கான் லண்டனின் புதிய மேயராக
தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
லண்டன் மேயராக
பதவியேற்கும் முதல் இஸ்லாமியர் என்ற பெருமையை
இவர் பெற்றுள்ளார்.
இதனால் இவருக்கு
சமூக வலைதளங்களில்
உலகம் முழுவதிலும்
இருந்து வாழ்த்துக்கள்
குவிந்து வருகின்றது.
0 comments:
Post a Comment