மட்டக்களப்பு
மாநகர சபையின் முன்னாள் மேயர்
சிவகீதா உட்பட
நால்வருக்கு 07ஆம் திகதிவரை
விளக்கமறியல்
மட்டக்களப்பு
மாநகர சபையின்
முன்னாள் மேயர் சிவகீதா
பிரபாகரன் உட்பட
04 பேரை எதிர்வரும்
07ஆம் திகதிவரை
விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற
நீதவான் எம்.கணேசராஜா உத்தரவிட்டுள்ளார்.
மட்டக்களப்பு
மாநகர சபையின்
முன்னாள் மேயர்
உட்பட 03 பெண்களும்
ஆண் ஒருவரும்
நீதவான் முன்னிலையில்
இன்று திங்கட்கிழமை
ஆஜர்படுத்தப்பட்டபோதே, நீதவான் மேற்படி
உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
மட்டக்களப்பில் விடுதியொன்றில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படும் மூன்று பெண்கள் மற்றும் நான்கு ஆண்கள் விடுதி உரிமையாளரான மட்டக்களப்பு மாநகர சபை முன்னாள் மேயர் திருமதி சிவகீர்தா பிரபாகரன் உட்பட ஏழு பேரை மட்டக்களப்பு பொலிஸார்நேற்று 23 ஆம் திகதி (23.10.2016) காலை கைது செய்தனர்.
(மட்டக்களப்பு மாநகர சபையின் முன்னாள் மேயர் திருமதி சிவகீத்தா பிரகாரனின் இல்லத்தோடு இணைந்தாற்போல் அவரினால் இந்த விடுதி நடாத்தப்பட்டு வந்துள்ளது.
இந்த விடுதியில் விபச்சார நடவடிக்கை இடம் பெறுவதாக மட்டக்களப்பு பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து மட்டக்களப்பு பொலிஸார் ஞாயிற்றுக்கிழமை காலை இந்த விடுதியை முற்றுகையிட்டு சோதனை நடாத்தியுள்ளனர்.
இதன் போது அங்கு விபச்சாரத்தில் ஈடுபட்டதாக தொவிக்கப்படும் நான்கு ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட இந்த விடுதியின் உரிமையாளரான மட்டக்களப்பு மாநகர முன்னாள் மேயர் திருமதி சிவகீர்;த்தா பிரபாகரன் அடங்களாக ஏழு பேர் கைது செய்து செய்யப்பட்டுள்ளனர்.மட்டக்களப்பு திருமலை வீதியில் இந்த விடுதி அமைந்துள்ளது.
இந்த விடுதியிலிருந்து கைது செய்யப்பட்ட இரண்டு பெண்களும் மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் மற்றும் கண்ணங்குடா பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் கைது செய்யப்பட்ட ஆண்களில் ஒருவர் காத்தான்குடியைச் சேர்ந்தவர் எனவும் ஏனையவர்கள் மட்டக்களப்பு பிரசேத்தினை சேர்ந்தவர்கள் எனவும் தெரிய வருகின்றது.
இதனை
அடுத்து, இவர்களிடம்
மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் நிலையில், முன்னாள் மேயரின்
கணவர் உட்பட
05 பேர் ஞாயிற்றுக்கிழமை
பொலிஸ் பிணையில்
விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments:
Post a Comment