மறைந்த மாமனிதர் அஸ்ரப்பின் மரணத்திற்கான
அறிக்கையை 16 வருட காலமாக முடக்கிய அரசுகள்!
உலங்கு
வானூர்தியில் சென்ற போது விபத்தில் உயிரிழந்தாக
சொல்லப்படுகின்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத்
தலைவர் மர்ஹும் அஸ்ரப்பின் மறைவில் இலங்கை
மற்றும் வெளிநாட்டு
முஸ்லிங்களின் மத்தியில் பாரிய சந்தேகம் இருந்து
வருகின்றது என பசீர் சேகுதாவூத் தெரிவித்தார்.
மறைந்த
தலைவர் அஸ்ரப்பின் 68வது
பிறந்த நாளாகிய
நேற்றைய தினம்
(23) அவரின் மறைவுக்குரிய காரணத்தை வெகு விரைவில்
கண்டறிந்து வெளியிட வேண்டும் என்ற அடிப்படையில்
கையெழுத்து வேட்டையொன்று ஏறாவூரில் ஆரம்பித்து வைத்து
ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர்
இவ்வாறு தெரிவித்தார்.
இங்கு
அவர் தொடர்ந்து
கருத்துத் தெரிவிக்கையில்,
குறித்த
விபத்து எந்த
வகையில் இடம்பெற்றுள்ளது
என விசாரணையை
மேற்கொள்ள அப்போது
ஆட்சி பீடத்தில்
இருந்த ஜனாதிபதி
சந்திரிக்கா அம்மையார் ஓய்வு பெற்ற நீதிபதி
குழுவொன்றை அமைத்து மூன்று மாத கால
விராசணை இடம்பெற்றது.
உரிய
முறையில் குழுவினரால்
விபத்து தொடர்பான
விசராணை மேற்கொண்டு
அறிக்கையை முன்னாள்
ஜனாதிபதி சந்திரிக்கா
அம்மையாரிடம் கொடுத்த போதும் அதற்கான முடிவுகளும்
அறிக்கையும் இற்றை வரைக்கும் 16 வருடங்கள் கடந்தும்
வெளியிடப்படவில்லை.
இந்த நல்லாட்சியில்
குறித்த விபத்து
தொடர்பான அறிக்கை
வெளியிட மைத்திரிபால
சிறிசேனா ஜனாதிபதியை
கேட்டு இரண்டு
லட்சம் கொண்டதான
கையெழுத்து வேட்டையை ஆரம்பித்துள்ளோம் என தெரிவித்தார்.
0 comments:
Post a Comment