'சிமி' எனப்படும், இஸ்லாமிய மாணவர் இயக்கத்தைச் சேர்ந்த, எட்டு முஸ்லிம் மாணவர்கள் பொலிஸார் நடத்திய, 'என்கவுன்டரில்' சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இஸ்லாமிய மாணவர்களின் நலனுக்கான தொடங்கப்பட்டது, 'சிமி' அமைப்பு. தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகத் தெரிவித்து , 2001ல், இந்த அமைப்பு அரசாங்கத்தால் தடை செய்யப்பட்டது.
தீவிரவாத செயல்களில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்ட, இந்த அமைப்பைச் சேர்ந்த எட்டு மாணவர்கள், முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் தலைமையிலான, பா.., ஆட்சி அமைந்துள்ள, மத்திய பிரதேச தலைநகர் போபாலில் உள்ள மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர்.

நேற்று அதிகாலை, 2:00 மணிக்கு, சிறை காவலர் ஒருவரை கொலை செய்த வர்கள், மற்றொரு காவலரை பிணையாக பிடித்து வைத்தனர்; பின், 'பெட்ஷீட்'களை பயன்படுத்தி, சிறையின் சுவரில் ஏறி தப்பினர் எனத் தெரிவிக்கப்பட்டது.
அடுத்த சில மணி நேரத்தில், சிறையில் இருந்து, 5 கி.மீ., தொலைவில், போபாலின் புறநகர் பகுதியான மலிகேடா பகுதியில் பதுங்கியிருந்த, வர்கள் குறித்து,உள்ளூர் மக்கள் தகவல் கொடுத்தனர்; உடன் பொலிஸார்ர் அவர்களை சுற்றி வளைத்தனர்.அப்போது, இவர்கள் துப்பாக்கியால் சுடத் தொடங்கியதால், பொலிஸாரும் பதிலுக்கு சுட்டனர் எனத் தெரிவிக்கப்பட்டிருக்கிறது; இதில், எட்டு மாணவர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
முன்னதாக, போபால் சிறையில் இருந்து, இவர்கள் தப்பிச் சென்றதும், மத்திய பிரதேச பொலிஸார், அவர்களின் புகைப்படங்களை உடனடியாக வெளியிட்டனர்.
அவர்களைப் பற்றி தகவல் தெரிவித்தால், தலா, ஐந்து லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும் என்றும், அறிவித்தனர்.என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட எட்டு முஸ்லிம் மாணவர்களின் பெயர்கள், அம்ஜத் கான், ஜாகிர் உசேன் சாதிக், முகம்மது சலீக் சாலு, முஜீப் ஷேக், மெக்பூப் குட்டூ மாலிக், முகம்மது காலித்அகமது, அகீல் கில்ஜி, அப்துல் மஜீத் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

'சிமி' உருவானது எப்படி?

ஜமாத் - - இஸ்லாமி - ஹிந்த் என்ற அமைப்பு, அறிஞர்களையும், கல்வியாளர்களையும் ஒருங்கிணைக்கும் வகையில், 1977ல் உருவாக்கியது தான், 'சிமி' எனப்படும், இந்திய இஸ்லாமிய மாணவர் அமைப்பு.
 இஸ்லாமிய மாணவர்களின் நலனுக்காக, கல்விக்கு உதவுவதற்காக, உத்தர பிரதேசத்தில் தொடக்கப்பட்டது.'இஸ்லாத்தை பாதுகாக்க, ஜிகாத் எனப்படும், புனிதப் போர் தான் வழிமுறை; அதற்காக உயிர் தியாகம் செய்வதே உன்னத தியாகம்' என்பது தான், இந்த அமைப்பின் அடிப்படை கொள்கையாக இருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த அமைப்பைச் சேர்ந்தவர்கள், பல தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், 2001ல், இந்திய மத்திய அரசு தடை விதித்தது. அதன் பின், இதன் தலைவர்கள் பலர் தலைமறைவாகினர்; சிலர் கைது செய்யப்பட்டனர்.தடை விதிக்கப்பட்ட பின், இந்த அமைப்பைச் சேர்ந்த சிலர், ஜம்மு - காஷ்மீரில் இயங்கி வரும், சில தீவிரவாத அமைப்புகளுக்கு ஆதரவாக செயல்படத் தொடங்கியதாக, தேசிய புலனாய்வு அமைப்பு தெரிவிக்கிறது.





0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top