நாளை மறுதினம்
2-ம் திகதி தூக்கிலிட திகதி
நிர்ணயிக்கப்பட்ட
மனநோயாளியின் மரண தண்டனைக்கு
பாகிஸ்தான் உச்ச நீதி மன்றம் தடை
பாகிஸ்தானில்
மிக மனநிலை நாளை
மறுதினம் 2-ம் திகதி நிறைவேற்றப்பட
இருந்த மரண தண்டனையை தடுத்து, அந்நாட்டின் உச்சநீதி மன்றம் அவரை காப்பாற்றியுள்ளது.
தற்போது
50 வயதாகும் இம்டாட் அலி என்பவருக்கு கடந்த
2001-ம் ஆண்டு
மதபோதகரான ஆசிரியரைக்
கொலை செய்த
குற்றத்துக்காக கடந்த 2008 ஆம் ஆண்டு மரண
தண்டனை விதிக்கப்பட்டது.
கடந்த
2012-ம் ஆண்டில்
இருந்து இம்டாட்
அலி, schizophrenia எனப்படும் தீவிர
மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததாகவும்
அதனால் அவரை
தூக்கிலிட கூடாது
எனவும் இங்குள்ள
மனித உரிமை
அமைப்புகள், கோரிக்கை விடுத்து வந்தன.
எனினும்,
மேற்படி நோயானது
பாகிஸ்தான் நீதித்துறை மற்றும் குற்றவியல்சார்ந்த மனநோய் பட்டியலில் இடம்பெறாததால் மரண
தண்டனையை ரத்து
செய்ய முடியாது
என பாகிஸ்தான்
அரசு அறிவித்தது.
இதுதொடர்பாக, நடைபெற்ற வழக்கின் தீர்ப்பும் அரசுக்கு
சாதகமாகவே அமைந்தது.
இதையடுத்து, நாளை மறுதினம் ( 2-11-2016 ) அன்று அவருக்கு
தூக்கு தண்டனை
நிறைவேற்ற அந்நாட்டின்
உள்துறை அமைச்சகம்
திகதி குறித்தது.
அரசின் இந்த
முடிவை எதிர்த்தும், இம்டாட்
அலிக்கு நிறைவேற்றப்படவுள்ள
மரண தண்டனையை
ரத்து செய்யக்
கோரியும் பாகிஸ்தான்
நீதி இயக்கத்தின்
சார்பில் அந்நாட்டின்
சுப்ரீம் கோர்ட்டில்
வழக்கு தொடரப்பட்டது.
தான்
செய்த குற்றத்தையும்,
தனக்கு விதிக்கப்படும்
தண்டனையையும் புரிந்துகொள்ள முடியாத நிலையில் உள்ள
ஒருவரை தூக்கிலிட்டுக்
கொல்வது என்பது,
ஏற்கனவே பாகிஸ்தான்
ஒப்புக்கொண்டு, ஒத்துழைப்பதாக கையொப்பமிட்டுள்ள
சர்வதேச மனித
உரிமைகள் உடன்படிக்கை
சாசனத்தை மீறும்
செயலாக அமைந்துவிடும்
என இவ்வழக்கின்
மனுதாரரான பாகிஸ்தான் நீதி
இயக்கம் குறிப்பிட்டிருந்தது.
இந்நிலையில்,
இந்த வழக்கை
இன்று விசாரித்த
நீதிபதி மரண
தண்டனைக்கு தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.
இவ்வழக்கின் மறுவிசாரணை நவம்பர் மாதத்தின் இரண்டாம்
வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment