தாஜ்மகாலில் இருவருக்கு அற்புதமான தருணத்தை
உருவாக்கிய புகைப்படக்காரர்

மோஹித் தேஜ்பால், 25 வயது புகைப்படக் கலைஞர். Photofie ஏற்பாடு செய்திருந்தப் போட்டியில் பயண புகைப்படத்திற்கான விருது பெற்றவர். அவருக்கு  விருது பெற வழிவகுத்த புகைப்படம் தான், பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் இருவரை வாழ்க்கையில் இணைய செய்துள்ளது.
2013 ஆம் ஆண்டு பிரான்ஸ் சுற்றுலா பயணிகள் மெளரத் பெஜி மற்றும் கொலம்பைன் ரூயிஸ் ஆகிய இருவரையும் தன் புகைப்படத்திற்கு போஸ் கொடுக்க சொன்னார் மோஹித். அந்த சுற்றுலா பயணிகளும் ரோஹித்துக்கு உதவும் நோக்கத்தில்தாஜ் மஹால் அருகே உள்ள மண்டபத்தின் வாயிலில் கைகோர்த்தபடிநின்றும்அமர்ந்தும் போஸ் கொடுத்தனர். அப்படி எடுக்கப்பட்ட, கீழே உள்ள புகைப்படம்தான் Judges Choice Travel Photography விருது பெற்றுள்ளது.
மோஹித்தின் புகைப்படம் விருது வென்றதை கேள்விப்பட்ட அந்த பிரான்ஸ் சுற்றுலா பயணிகள், மோஹித்திற்கு மனம் உருகி செய்தி ஒன்றை அனுப்பி வைத்திருந்தனர்.
அதில், 'உங்கள் புகைப்படம் விருது பெற்றது மகிழ்ச்சியளிக்கிறது மோஹித். அந்த புகைப்படம் எடுக்கும் பொழுது நானும் மெளரத்தும் நண்பர்கள் மட்டும் தான். ஆனால் நீங்கள் புகைப்படத்திற்காக கை கோர்த்து நிற்க சொன்ன போது, இருவருக்கும் சங்கடமாக இருந்தது.
ஆனாலும் புகைப்படம் அழகாக வர வேண்டும் என்பதற்காக கை கோர்த்து நின்றோம். நாங்கள் இருவரும் முதன்முறையாக கைகோர்த்து நின்ற தருணம் அது. அதற்கு பின்னர் நாங்கள் இருவரும் காதலிக்க தொடங்கிவிட்டோம்.

தாஜ்மகால் என்னும் அற்புதமான இடத்தில் தோன்றிய அற்புதமான தருணம். இன்றோடு உங்கள் புகைப்படத்திற்காக நாங்கள் கைக்கோர்த்து நின்று இரண்டு வருடங்கள் கடந்துவிட்டது. இன்னும் அன்பில் இணைந்துதான் இருக்கிறோம். உங்கள் கலையால் இது போன்ற அற்புத தருணங்களை உருவாக்க வாழ்த்துகள்' இவ்வாறு எழுதியிருந்தனராம்.



0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top