மொசூல் நகர் மக்களை ஐ.எஸ் அமைப்பு
கேடயமாக பயன்படுத்துகிறது
அமெரிக்கா தெரிவிப்பு!
ஈராக், சிரியா நாடுகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் ஐ.எஸ் தீவிரவாதிகளின் பிடியில், ஈராக்கின் பிரபல நகரமான மொசூல் உள்ளது. தலைநகர் பாக்தாத்தில் இருந்து 360 கி.மீட்டர் தொலைவில் அமைந்துள்ள மொசூல் ஈராக்கின் 2–வது மிகப்பெரிய நகரம் ஆகும்.
5 ஆண்டுகளுக்கு முன்பு ஈராக்கில் இருந்து அமெரிக்க படைகள் முற்றிலுமாக வெளியேறின. இதையடுத்து கடந்த 2014–ம் ஆண்டு தீவிரவாதிகளின் ஈராக் ராணுவத்தை விரட்டியடித்து விட்டு மொசூல் நகரைக் கைப்பற்றிக் கொண்டனர். மேலும் ஐ.எஸ். தீவிரவாத இயக்கத் தலைவர் அபு பக்கிர் அல்–பகாதி தன்னை இந்த பகுதியின் தலைமை நிர்வாகியாக அறிவித்துக் கொண்டார்.
15 லட்சம் மக்கள் வசிக்கும் பெரிய நகரம் மொசூல் ஆகும். அங்குள்ள மக்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் இந்த நகரை மீட்பதற்கு ஈராக் ராணுவம் அதிரடி நடவடிக்கை எடுக்கத் தயங்கி வந்தது.
தற்போது ஈராக்கின் பல பகுதிகளில் இருந்து ஐ.எஸ். தீவிரவாதிகள் விரட்டியடிக்கப்பட்டு விட்டனர். மொசூல் மட்டுமே அவர்களின் பிடியில் உள்ளது. கடந்த சில மாதங்களாக மொசூல் நகரையொட்டிய பகுதிகளை கைப்பற்றி வந்த ஈராக் ராணுவம் தற்போது அந்த நகரின் நாலாபுறத்தையும் சுற்றி வளைத்து உள்ளது. சுமார் 3 லட்சம் வீரர்கள் ஆயுதங்களுடன் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர்.
0 comments:
Post a Comment