பல்கலைக்கழக மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனரா?
அதிர்ச்சித் தகவல்கள்!
யாழ்ப்பாணம் கொக்குவில் குளப்பிட்டி பகுதியில் நேற்று வியாழக்கிழமை நள்ளிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற அசாதாரண சம்பவம் ஒன்றில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் பலியாகியுள்ளனர்.
இரவு வேளையில் மோட்டார் சைக்கிளில் வேகமாக சென்ற மாணவர்களை பொலிஸார் இடைவழியில் திடீரென மறித்த போதே மேற்படி சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தற்போது தகவல்கள்
வெளியாகியுள்ளது.
விபத்து
இடம்பெற்றதாக கூறப்படும் நேரம் துப்பாக்கிச் சத்தங்கள்
கேட்டதாக அப்பகுதி
மக்களால் கூறப்படுகின்றது.
அத்துடன்,
விபத்து நடைபெற்ற
சில நிமிடங்களிலேயே
அப்பகுதியில் பொலிஸார் நடமாடியுள்ளதாகவும் தகவல்கள்
வெளியாகியுள்ளன.
இந்தத்
தகவலினால், மாணவர்களின் உடற்கூறு பரிசோதனை நடைபெறும்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வளாகத்துக்குள் பல்கலைக்கழக
மாணவர்கள் சூழ்ந்துள்ளனர்.
கலைப்பீடத்தில்
3 ஆம் வருடத்தில்
கல்வி கற்கும்
155 ஆம் கட்டை
கிளிநொச்சியைச் சேர்ந்த நடராசா கஜன் (வயது
23), சுன்னாகத்தைச் சேர்ந்த பவுண்ராஜ்
சுலக்ஸன் (வயது
24) ஆகிய மாணவர்களே,
இச்சம்பவத்தின் மூலம் உயிரிழந்துள்ளனர்.
சம்பவ
இடத்திற்கு வருகை தந்த யாழ்.நீதவான்
நீதிமன்ற நீதவான்
சதீஸ்கரன் விசாரணைகளளை
மேற்கொண்டார்.
இதேவேளை
சம்பவம் இடம்பெற்ற
பகுதியில் பெருமளவு
தீக்குச்சிகள் சிதறிய நிலையில் காணப்பட்டதாகவும்
அறிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.