107 பெண்களை மணந்த மதகுருவுக்கு
மீண்டும் திருமணமாம்!
சமூக வலை தளங்களில் வைரசாக பரவும் செய்தி!!
நைஜீரியாவில் 107 பெண்களை மணந்த மத குருவுக்கு மீண்டும் திருமணம்
நடைபெற உள்ளதாகச் செய்திகள் வெளியாகியுள்ளது.
நைஜீரியாவில் பிடா மாகாணத்தை சேர்ந்தவர் முஹம்மது பெல்லோ அபூபக்கர். இவருக்கு 92 வயது ஆகிறது. மத குருவாகவும் இருக்கிறார். இவருக்கு ஏற்கனவே 107 பெண்களுடன் திருமணம் நடந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களில் 10 பேரை விவாகரத்து செய்துவிட்டாராம். மீதமுள்ள 97 பெண்களுடன் குடும்ப வாழ்க்கை நடத்தி வருகின்றாராம். இவருக்கு 185 குழந்தைகளும் உள்ளனராம்.
இந்த நிலையில் அவர் இறந்து விட்டதாக வதந்தி பரவியது. ஆனால் இதை அவர் மறுத்துள்ளார். திடீரென வீடியோவில் தோன்றிய அவர் தான் மீண்டும் ஒரு பெண்ணை திருமணம் செய்து அவருடன் குடும்பம் நடத்த இருப்பதாக அறிவித்திருக்கிறாராம்.
இது ஆன்லைன் மற்றும் சமூக வலை தளங்களில் வைரசாக பரவியுள்ளது.
0 comments:
Post a Comment