சிமி தீவிரவாதிகள் எனத் தெரிவிக்கப்பட்டு

 சுட்டுக் கொல்லப்பட்ட எட்டு முஸ்லிம்கள் விவகாரத்தில்

உச்ச நீதிமன்றம் விசாரிக்க  வேண்டும்

அசாதுத்தின் உவைஸ் கோரிக்கை



சிமி தீவிரவாதிகள் எனத் தெரிவிக்கப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்ட எட்டு முஸ்லிம் மாணவர்கள் விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு விசாரணை நடத்தினால்தான், முழு உண்மைகளும் வெளிவரும் என ஐதராபாத்தில் அகில இந்திய மஜ்லிஸ்-இ-இதேகாதுல் முஸ்லிமீன் கட்சி தலைவர் அசாதுத்தின் வைஸ் கோரிக்கை விடுத்துள்ளார்
இந்திய மத்தியபிரதேசத்தில்  எட்டு முஸ்லிம் மாணவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டது பற்றி அசாதுத்தின் உவைஸ் நிருபர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-
சிமிஅமைப்பைச் சேர்ந்த 8 பேர் கொல்லப்பட்ட விவகாரத்தில், மத்தியபிரதேச உள்துறை மந்திரி கூறுவதற்கும், பொலிஸார் கூறுவதற்கும் இடையே நிறைய முரண்பாடுகள் உள்ளன. அந்த 8 பேரும் ஸ்பூனையே ஆயுதமாக பயன்படுத்தியதாக, உள்துறை மந்திரி கூறியுள்ளார்.
அதிநவீன ஆயுதங்களை வைத்துள்ள தீவிரவாத தடுப்பு படை பொலிஸார், ஸ்பூன் வைத்திருப்பவர்களை பாய்ந்து அமுக்கி விடலாமே? எதற்காக சுட வேண்டும்?
மேலும், கொல்லப்பட்டவர்கள் கைக்கடிகாரம், ஷூ, பெல்ட் ஆகியவற்றை அணிந்துள்ளனர். ஜெயிலில் அந்த பொருட்களுக்கு அனுமதி இல்லாதநிலையில், அங்கிருந்து தப்பியவர்கள் அவற்றை அணிந்து இருந்தது எப்படி? எனவே, இவை எல்லாம் நம்பும்படி இல்லை. சுப்ரீம் கோர்ட்டு விசாரணை  நடத்தினால்தான், முழு உண்மைகளும் வெளிவரும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


இதனிடையே, சிமிதீவிரரவாதிகள் எனத் தெரிவித்து சுட்டுக் கொல்லப்பட்ட 8 முஸ்லிம்கள் தொடர்பாக, பா.ஜனதாவுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே மோதல் வெடித்துள்ளது. ‘சிமிதீவிரரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது போலி என்கவுன்ட்டர் அல்ல என்று பொலிஸ் தரப்பில் மத்தியபிரதேச .ஜி. யோகேஷ் சவுத்ரி விளக்கம் அளித்துள்ளார்.

பொலிஸ் தரப்பில் கூறுவதை நம்ப முடியாது என்றும், இதுபற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சியின் கமல் நாத் எம்.பி., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் பிருந்தா கரத் ஆகியோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

ஆனால், எதிர்க்கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக நடந்து கொள்வதாகவும், அது பாதுகாப்பு படையினரின் மனஉறுதியை சீர்குலைக்கும் என்றும் பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் நரசிம்மராவ் தெரிவித்துள்ளார்.







0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top