"முஸ்லிம்' எனக் குறிப்பிட்டு சீக்கியரின் படம்
டிரம்ப் ஆதரவு துண்டுப் பிரசுரத்தால் சர்ச்சை!
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்புக்கு ஆதரவான துண்டுப் பிரசுரத்தில், சீக்கியரை "முஸ்லிம்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து அந்த நாட்டின் "டபிள்யூடிஹெச்ஆர்' தொலைக்காட்சி கூறியதாவது:
அண்மையில் டொனால்டு டிரம்ப்புக்கு ஆதரவாக விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில் ஃபிஷர்ஸ் நகரைச் சேர்ந்த குரீந்தர் சிங் கல்சா என்பவரது படம் இடம் பெற்றுள்ளது. மேலும், அவரது உருவத்தின் மீது "முஸ்லிம்' என்ற குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து குரீந்தர் சிங் கூறுகையில், "டொனால்டு டிரம்ப்பின் துண்டுப் பிரசுரத்தில் எனது படத்தைப் போட்டு, நான் முஸ்லிம் என்றும், டிரம்புக்கு ஆதரவு அளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால், அந்தத் துண்டுப் பிரசுரத்துக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை.
நான் முஸ்லிமும் கிடையாது, டிரம்பின் ஆதரவாளனும் கிடையாது' என்று கூறியுள்ளார்.
மேலும்,
"என் அனுமதி இல்லாமலே அந்தப் படம் துண்டுப் பிரசுரத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது எனக்கு அதிர்ச்சியும், வேதனையும் அளிப்பதாக உள்ளது.
அந்தத் துண்டுப் பிரசுரம் நாடு முழுவதும் விநியோகிக்கப்படவிருப்பதால், சீக்கியர்களைக் குறித்த குழப்பம் மேலும் அதிகரிக்கும்' என்று குரீந்தர் சிங் கூறியதாக "டபிள்யூடிஹெச்ஆர்' தொலைக்காட்சி தெரிவித்தது.
0 comments:
Post a Comment