புனித மக்கா நகரம் மீது ஹவுத்தி போராளிகள்
ஏவுகணை தாக்குதல்
சவூதி அரேபியா குற்றச்சாட்டு
முஸ்லிம்களின் புனித நகரமான மக்கா நகரம் மீது அண்டை நாடான ஏமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் ஏவுகணையை வீசி தாக்குதல்
நடத்தியதாக சவூதி அரேபியா குற்றம்சாட்டியுள்ளது.
ஏமன் நாட்டில் அரசுக்கு எதிராக ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ஹவுத்தி இனப்போராளிகளை ஒடுக்க சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், சவூதி அரேபியா நாட்டில் உள்ள இஸ்லாமியர்களின் புனித நகரமான மக்காவை குறிவைத்து ஏமனில் உள்ள ஹவுத்தி இனப் போராளிகள் ஏவுகணையை வீசி தாக்குதல் நடத்தியதாகவும், மக்காவில் இருந்து சுமார் 65 கிலோமீட்டர் தூரத்தில் அந்த ஏவுகணையை சவூதி நாட்டின் விமானப்படைகள் தடுத்துநிறுத்தி, தாக்கி அழித்ததாகவும் சவுதி அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Scuds have been launched at Saudi Arabia from Yemen several times, but have
been shot down mostly by Patriot missiles supplied by the United States
|
A man stands by sheep killed by Saudi-led air strikes in Khamis Bani-Saad
district of the western province of al-Mahweet, Yemen, October 27, 2016
|
0 comments:
Post a Comment