சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை
பொது மேடையில் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவிப்பு
சாய்ந்தமருதுக்கு தனியான நகரசபை ஒன்றை வெகுவிரைவில்
பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்று நான்
இந்த மண்ணிலிருந்து
உறுதியளிக்கின்றேன் என உள்ளூராட்சி
மாகாண சபைகள்
அமைச்சர் பைசர்
முஸ்தபா
தெரிவித்தார்.
அரச
வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின்
கிழக்கு மாகாணத்துக்கான
முதலாவது கிளையை
சாய்ந்தமருதில் அமைச்சர் றிசாத்
பதியுதீனுடன் இணைந்து இன்று நேற்று 21 ஆம் திகதி வெள்ளிக்கிழமை
(21/10/2016) திறந்துவைத்த பின்னர் இடம்பெற்ற
பொதுக்கூட்டத்தில் அவர் உரையாற்றிய
போது இந்த
உறுதிமொழியை வழங்கினார்.
கலாநிதி ஏ.எம் ஜெமீல் தலைமையில் இடம்பெற்ற
இந்தப் பொதுக்கூட்டத்தில்
அமைச்சர் பைசர்
முஸ்தபா தொடர்ந்து
உரையாற்றுகையில்
சாய்ந்தமருது
மக்களின் நீண்டகால
கோரிக்கை இனி
நிறைவேறப் போகின்றது.
இந்தப் பிரதேசத்துக்கு
தனியான நகரசபை
வேண்டுமென்று அமைச்சர் றிசாத் பதியுதீன் மற்றும்
சகோதரர் ஏ.எம். ஜெமீல் ஆகியோர் என்னிடம் நீண்டகாலம்
வலியுறுத்தி வந்ததன் பிரதிபலன் இப்போது உங்களுக்குக்
கிடைத்துவிட்டது.
இந்தப்
பிரதேசத்துக்கு தனியான நகரசபை ஒன்று வேண்டுமென
என்னிடம் வேறுசில
அரசியல்வாதிகள் கோரிக்கை விடுத்தபோதும், அவர்கள் இதயசுத்தியாக
இந்தக் கோரிக்கையை
விடுக்கவில்லை என்பதை நான் உணர்ந்துகொண்டேன். வெறுமனே புகைப்படங்களுக்காகவும
பத்திரிகை விளம்பரங்களுக்காவுமே
அவர்கள் இந்தக்
கோரிக்கையை விடுத்து உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை நான் அறிந்துகொண்டேன்.
ஆனால், அமைச்சர் றிசாத்தைப்
பொறுத்தவரையில் உங்களின் பிரச்சனைகளை இனங்கண்டு இதயசுத்தியோடு
இந்த முயற்சியில்
இறங்கினார் என்பதை பகிரங்கமாக இவ்விடத்தில் கூறுகின்றேன். இவ்வாறு உள்ளூராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
0 comments:
Post a Comment
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.