கை குலுக்கி கொள்ளாத டிரம்ப் – ஹிலாரி

அசிங்கமான பெண் ஹிலாரி! ரஷ்யாவின் கைபொம்மை டிரம்ப்!

காரசார இறுதி கணம்

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுக்கு சொற்ப நாட்களே உள்ளது. இந்நிலையில் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களான ஹிலாரி - டிரம்ப் இடையே இன்று இறுதி நேரடி விவாதம் நடைபெற்றது.
லாஸ் வேகாஸ் பகுதியில் சுமார் 90 நிமிடங்கள் நடந்த இந்த விவாதத்தை லட்சக்கணக்கான மக்கள் டிவி மூலமாகவும் நேரடியாகவும் பார்த்தனர். இந்த விவாதத்தில் பெண்களின் உரிமைகள், ரஷ்யாவுடனான ஆதரவு போக்கு என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இருவருக்கம் இடையே காரசாரமாக விவாதம் நடந்தது.
இதற்கு முன் நடந்த நேரடி விவாதங்களின் போது, மேடைக்கு வந்ததும் இருவரும் கைகுலுக்கி கொண்டனர். ஆனால் இன்றைய விவாதத்தின் போது இருவரும் கை குலுக்கிக் கொள்ளவோ, மரியாதை நிமித்தமாக சிரித்துக் கொள்ளவோ கூட இல்லை. மாறாக இருவர் முகத்திலும் ஒரு இறுக்கம் காணப்பட்டது. முதல் கேள்வியிலிருந்து அவர்கள் இடையேயான மோதல் மற்றும் சாடல் பேச்சுக்கள் ஆரம்பமாகின.
தற்போது வரை பேசப்பட்ட சில சுவாரசிய விடயங்களை நமது கணிப்புக்கு நோக்கலாம்.

அமெரிக்கா,ரஷ்யா இரு நாடுகளின் கொள்கைகளையும் உலகம் நன்கு அறியும். இதில் ரஷ்யாவுக்கு ஆதரவாக செயற்படுவது யார் என்ற விவாதத்தில் டிரம்ப்புடின் தனது நண்பர் இல்லாவிடினும், ஒபாமா, ஹிலாரியை விட புதின் சிறப்புஎன தெரிவித்தவுடன் இதற்கு மாற்று கருத்தாக ஹிலாரிஅமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தி வரும் நிலையில், டிரம்ப் ரஷ்யாவிற்கு உதவ முற்படுவதாககுற்றம்சாட்டியுள்ளார்.
தனி நபர் ஆயுதம் அதாவது துப்பாக்கி வைத்திருப்பதில் கட்டுப்பாடும்,நிபந்தனைகளும் தேவை இது முறையாக காணபடாத காரணத்தினாலேயே அதிகமான குற்றங்கள் நடைபெறுகின்றது என்ற ஹிலாரியின் கருத்திற்கு டிரம்ப், தனி நபர் துப்பாக்கி வைத்திருப்பது அவசியம் என்பதோடு மக்கள் ஆயுதம் வைத்துக் கொள்ளும் உரிமை பாதுகாக்கப்படும் என கூறியுள்ளார்.
உச்சநீதிமன்றம் அனைத்து தரப்பு மக்களையும் சமமாக நடத்துவதோடு பொது நிறுவனங்களுக்கு அல்லாமல் மக்களுக்கு ஆதரவாக நீதியாகவும் செயற்படவேண்டும். மேலும் கருக்கலைப்பு என்பது பெண்கள் தேர்ந்தெடுக்கும் தவறான முடிவு எனவும் தனது கருத்தை ஹிலாரி பதிவு செய்துள்ளார்.
தன் மீது சுமத்தப்பட்டுள்ள பெண்கள் மீதான குற்றச்சாட்டுகள் அனைத்தும் புனையப்பட்டவை என்பதோடு தான் பெண்களை மிகவும் மதிப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் கல்வியை மேம்படுத்துவதே தனது திட்டம் என கூறிய டிரம்ப் ஹிலாரி கிளிண்டனை ஒருஅசிங்கமான பெண்என வர்ணித்துள்ளார்.
மேலும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் தான் தோற்று போனால் தேர்தல் முடிவை ஒப்புக்கொள்வது குறித்து ட்ரம்ப் உறுதியளிக்க மறுத்துவிட்டார். இது அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.
குறித்த தொலைக்காட்சி விவாத்துக்கு முன்னரும் பின்னும், இரு வேட்பாளர்களும் கைகுலுக்கிக்கொள்ள மறுத்துவிட்டது வருத்தமே.
ஆரம்பத்தில் இருந்தே குறித்த விவாதநிகழ்ச்சிகளில் ஹிலாரி கிளிண்டன் முண்ணனி வகித்ததோடு மக்களின் நன்மதிப்பையும் பெற்றிருந்தார்.

மேலும் அதன் பின் மக்கள் மத்தியில் எழுப்பப்பட்ட கருத்துகணிப்பிலும் ஹிலாரி தான் முதன்மை வகித்தார்.


அடுத்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் மொத்த உலகத்தின் பார்வையும் அமெரிக்கா மீது அங்கம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.











0 comments:

Post a Comment

:) :)) ;(( :-) =)) ;( ;-( :d :-d @-) :p :o :>) (o) [-( :-? (p) :-s (m) 8-) :-t :-b b-( :-# =p~ $-) (b) (f) x-) (k) (h) (c) cheer
Click to see the code!
To insert emoticon you must added at least one space before the code.

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top