உங்கள் வீட்டிற்கு முன்னால் குப்பையை வீசுகின்றார்களா ?

இதோ விசேட அழைப்பு இலக்கங்கள்


வீதிகளில் குப்பைகளை வீசுபவர்களுக்கு எதிராக முறைப்பாடுகளை பதிவு செய்வதற்காக விசேட அழைப்பு இலக்கங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த விசேட திட்டத்துக்கு 119 , 011-2587124 , 011-259311 என்ற விசேட தொலை பேசி இலக்கங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
குப்பைகளை வீதிகளில் வீசுவார்கள் தொடர்பில் உடனடியாக இந்த தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்புக்கு கொண்டு தெரிவிக்க முடியும் என உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

நாட்டில் அனைத்து மாநகர சபைக்குட்பட்ட எல்லையில் தரம் பிரிக்கப்படாத குப்பைகளை அடுத்த மாதம் முதலாம் திகதியிலிருந்து சேகரிக்காமல் இருப்பதற்கு தீர்மானம் எடுத்துள்ளதாகவும் அமைச்சர் பைஸர் முஸ்தபா மேலும் தெரிவித்துள்ளார்.

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குப்பை சேகரிக்கும் வேலைத்திட்டம் தவறாமல் ஒவ்வொரு நாளும் மேற்கொள்ள வேண்டிய ஒன்றாகும். எனவே அதில் மாநகர சபைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு குப்பைகளை கொட்டுபவர்கள் இலகு வழிகளை ஏற்படுத்திக்கொடுக்க வேண்டும்.

இந்த நடவடிக்கைகளுக்கமைவாக அடுத்த மாதத்தில் இருந்து நாட்டின் சகல மாநகர எல்லைப் பிரதேசங்களிலுள்ள வீடுகள், வர்த்தக நிலையங்கள், பாடசாலைகள், வைத்தியசாலைகள், அரச திணைக்களங்கள் என சகல இடங்களிலும் குப்பைகளை ஒதுக்கும் போது அதனை தரம் பிரித்து ஒதுக்க வேண்டும்.

எனினும் உரிய முறையில் தரம் பிரித்து ஒதுக்கப்பட்ட குப்பைகளை மாத்திரம் மாநகர சபை சேகரிக்கும். குறித்த திட்டம் தற்போதைக்கு சில மாநகர சபைகளால் முன்னெடுக்கப்படுகிறது. இருப்பினும் நவம்பர் மாதத்திலிருந்து இத்திட்டம் சகல மாநகர சபைகளாலும் அமுல்படுத்தப்படவுள்ளது.

அத்துடன் இத்திட்டத்தின் நடைமுறைச் சிக்கல்களை அவதானித்து விரைவில் நகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளில் அமுல்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

அதனையும் மீறி தமது குப்பைகளை தரம் பிரிக்காமல் இருப்பவர்களின் குப்பைகளை மாநகர சபைகள் ஒரு போதும் சேகரிக்காது.

மேலும் வீதிகளில் குப்பைகளை வீசியெறிபவர்களுக்கு எதிராகவும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இந்த சட்டத்தில் எந்த விதமான மாற்றங்களும் ஏற்படுத்தப்படாது.

வீதிகளில், பாதைகளில் குப்பைகள் வீசப்பட்டு கிடப்பின் குறித்த வீட்டு உரிமையாளருக்கு எதிராகவே வழக்கு தொடரப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் மூலம் மக்களுக்கு அபிவிருத்திகளை மாற்றத்தை கொண்டு வருவதற்கு நாம் முயற்சிக்கின்றோம். இதனடிப்படையில் இந்த திட்டத்துக்கு சகலரிடமிருந்தும் ஒத்துழைப்பினை எதிர்பார்க்கின்றோம்.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top