ஆசியாவின் அரச மாளிகைகள்
உலகின்
பல நாடுகளிலும்
நிலவிய முடியாட்சி
முறை கிட்டத்தட்ட
முடிவுக்கு வந்துவிட்டது. மக்களாட்சி முறைதான் பெரும்பாலான
உலக நாடுகளில்
நடைமுறையில் இருக்கிறது.
ஆனால்
இந்த நூற்றாண்டிலும்
முழுமையான முடியாட்சி
நிலவும் நாடுகள்
இருக்கத்தான் செய்கின்றன. முழுமையான முடியாட்சிக்கு உதாரணமாக
அரபு நாடுகள்
பலவற்றையும் சொல்லலாம்.
குறிப்பாக,
ஆசியாவில் புரூனே
முழுமையான முடியாட்சி
நாடு எனலாம்.
இவை அல்லாமல்
ஆசியாவில் முடியாட்சி
நடைமுறையில் இருக்கும் நாடுகள் அதிகம்.
நேபாளம்
சமீப காலத்துக்கு
முன்புவரை முடியாட்சி
நாடாகத்தான் இருந்தது. ஆசியாவில் இவை அல்லாமல்
தாய்லாந்து, வியட்நாம், ஜப்பான், கம்போடியா ஆகிய
நாடுகளிலும் இன்றும் அரச குடும்பத்தின் செல்வாக்கு
இருக்கிறது.
இவற்றில்
புரூனே அரச
குடும்பம் உலகத்திலேயே
செல்வச் செழிப்பு
மிக்க அரச
குடும்பமாகும். அரச குடும்பத்தின் மாளிகையான இஸ்தன
நூருல் இமான்
உலகின் ஆடம்பரமான
குடியிருப்பாகும். புகழ்மிக்க ஆசியாவின்
அரச மாளிகைகளின்
படத் தொகுப்பு
இது:
ராயல் பேலஸ், கம்போடியா
|
இஸ்தன நூருல் இமான், புரூனே
|
டெக்கன்கோலிங் பேலஸ், பூட்டான்
|
கிராண்ட் பேலஸ், தாய்லாந்து
|
டா லாத் கிங் பேலஸ், வியட்நாம்
|
நாரயணகிட்டி பேலஸ், நேபாளம்
|
டோக்கியா இம்பீரியல் பேலஸ், ஜப்பான்
|
0 comments:
Post a Comment