யாழ். பல்கலைக்கழக நிர்வாக முடக்க போராட்டம் : ஊடகவியலாளர்களுக்கு அச்சுறுத்தல்!
யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இன்று காலை தொடக்கம் பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாக முடக்கல் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் அங்கு செய்தி சேகரிப்பில் ஈடுபட்டிருந்த ஊடகவியலாளர்களின் புகைப்பட கருவிகளை தம்மிடம் கொடுக்குமாறு கோரி பல்கலைக்கழக துணைவேந்தர் ஊடகவியலாளர்களுடன் முரண்பட்டுள்ளார்.
இந்த நிலையில் பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம் மற்றும் பீடாதிபதிகள் தம்மை உள்ளே விடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.
எனினும் மாணவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் மாணவர்களுக்கும் துணைவேந்தருக்கும் இடையில் வாக்குவாதம் உண்டாகியுள்ளது.
இந்நிலையில் புகைப்படங்களை எடுக்கவேண்டாம். என கூறி அங்கு கடமையில் இருந்த ஊடகவியலாளர்களின் புகைப்பட கருவிகளை தம்மிடம் கொடுக்குமாறு துணை வேந்தர் கூறியுள்ளார்.
இதற்கிடையில் ஒரு நபர் சிங்களத்தில் ஊடகவியலாளர்களை அச்சுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம் சுவாமிநாதன் இன்று முற்பகல் பல்கலைக்கழக துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகளை சந்திக்கவுள்ள நிலையில் சந்திப்பை கருத்தில் கொண்டு துணைவேந்தர் மற்றும் பீடாதிபதிகள் மட்டும் உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர்எனத் தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment