தமிழக 'முதல்வர் ஜெயலலிதாவுக்கு பக்கவாதமா?

முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் ஹண்டே
தெரிவித்த கருத்தால் பரபரப்பு

'முதல்வர் ஜெயலலிதா, வேகமாக குணமடைந்து வருகிறார்; இன்னும், 10 நாட்களுக்குள், அவர் வீடு திரும்புவார்,'' என, எம்.ஜி.ஆர்., ஆட்சியில், சுகாதாரத்துறை அமைச்சராக இருந்த ஹண்டே தெரிவித்துள்ளார்.

டாக்டரான ஹண்டே, தற்போது பா..,வில் இருக்கிறார். அவர், அப்பல்லோ மருத்துவமனை சென்று, முதல்வரின் உடல்நிலை குறித்து விசாரித்து அறிந்தார்.
பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது:
முன்னர் சுகாதாரத் துறை அமைச்சராக இருந்த காரணத்தால்,எம்.ஜி.ஆர்., மருத்துவமனையில் இருந்தபோது,அவரை கவனிக்கும் வாய்ப்பு கிடைத்தது.தற்போது,முதல்வர் உடல் நிலையை அறிவதற்காக வந்தேன். இங்கு வந்த பிறகு, மன நிறைவு ஏற்பட்டுள்ளது. காரணம், முதல்வர் நல்ல வகையில் குணமடைந்து வருகிறார்.  குறிப்பாக, ஒரே ஒரு கருத்தை தெரிவிக்கிறேன்.
அமெரிக்காவில் சிகிச்சை பெற்ற போது, எம்.ஜி.ஆருக்கு பக்கவாதம் வந்தது. அப்போது, அவருக்கு சிகிச்சை அளிக்க நல்ல, 'பிசியோ தெரபிஸ்ட்' தேவை என, அனைவரும் நினைத் தோம். அதற்காக, தென் கொரியாவில் இருந்து, புகழ் பெற்ற மருத்துவரை அழைத்து வந்து, சிகிச்சை கொடுத்தோம்; அவர் பூரண குணமடைந்தார்.

அவர் சிகிச்சையில் இருந்த போது, அவரால் நிற்க முடியாது; கை அசைக்க முடியாது என, சிலர் கூறினர்.

அவர்களே வியக்கும் வகையில், எம்.ஜி.ஆர்., குணமடைந்து, விமானத்தில் இருந்து இறங்கும் போது, கைகளை அசைத்தபடி,சிங்க நடை போட்டு வந்தார். அதேபோல் தற்போது, சிங்கப்பூரில் இருந்து வந்துள்ள, இரண்டு பெண் பிசியோதெர பிஸ்ட் டாக்டர்கள், நல்ல வகையில் ஜெயலலிதாவுக்கு, சிகிச்சை அளித்து வருகின்றனர்.

இந்த தகவலை, லோக்சபா துணை சபாநாயகர், தம்பிதுரைமற்றும் டாக்டர்கள் தெரிவித்தனர். நுரையீர லில் உள்ள சளி, நோய் எதிர்ப்பு மருந்துகள் மூலம் வெளியேறுவதை விட, பிசியோதெரபி சிகிச்சை மூலம் வேகமாக வெளியேறி வருகிறது. எனக்கு முழு நம்பிக்கை உள்ளது. நானும் மருத்துவமனை நடத்தி வருகிறேன். மருத்துவ துறையில் அனுபவம் உள்ளது. அதன் அடிப்படையில் கூறுகிறேன்; முதல்வர், 10 நாட் களுக்குள் வீடு திரும்புவார். ஏனெனில், அவர் வேகமாக குணமடைந்து வருகிறார்.

ஆரம்ப காலத்தில் ஜெயலலிதா நன்றாக வர வேண்டும் என, அருகில் இருந்து உதவி செய்துள்ளேன்; அதற்கு, அவரே மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார். ஜெயலலிதா சிறந்த தலைவர்.

ராஜாஜியின் அறிவும், எம்.ஜி.ஆரின் புகழும் இணைந்த ஒரே தலைவர். அவருக்கு, தென் கிழக்கு ஆசியாவில் புகழ்பெற்ற, சிங்கப்பூர் மவுன்ட் மருத்துவமனையை சேர்ந்த, இரண்டு பெண் மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர். இவ்வாறு ஹண்டே தெரிவித்துள்ளார்.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top