சாய்ந்தமருது தோணா அபிவிருத்தியில்

வெளிப்படைத்தன்மையும் திறத்தாரின் பங்கு பற்றலும் தேவை

- சாய்ந்தமருது சூறா சபை


சாய்ந்தமருது தோணா அபிவிருத்திக்காக ரூபா 162 மில்லியன் நிதி ஒதுக்கீட்டை அமைச்சரவை அங்கீகரித்துள்ளதாக பத்திரிகைகளில் வெளிவந்த செய்தி தொடர்பாக கௌரவ அமைச்சர் றவுப் ஹக்கீம் அவர்களுக்கு சாய்ந்தமருது சூறா சபைத் தலைவர் டாக்டர் எம்.ஐ.எம் ஜெமீல் அனுப்பி வைத்துள்ள செய்தியில் இந்நிதி ஒதுக்கீட்டுக்காக நன்றி; தெரிவிக்கும் அதே வேளை சென்ற காலங்களில் போலல்லாமல் இம்முறை இவ்வேலைத்திட்டம் வெளிப்படைத்தன்மையுடனும் இப்பிதேசத்தைச் சேர்ந்த துறைசார் நிபுணர்களினது பங்குபற்றுதலுடனும் முன்னெடுக்கப்பட வேண்டும் எனக் கோரியுள்ளார்.
இவ்வேலைத்திட்டத்தில் உத்தேசிக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பான விபரங்களும் அதற்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதி ஓதுக்கீடுகளும் விபரமாக மக்கள் பார்வைக்கு இலகுவாகக் கிடைக்க வேண்டும. ஏற்கனவே ஜெய்கா திட்டத்தில் உள்ளவற்றிற்கு மேலதிகமாக பல வேலைகள் தற்காலத்தில அவசியமாக உள்ளது. (+ம் தோணாவை ஊடறுத்துச் செல்லும் பாலங்கள்) எனவே இவை தொடர்பாக தோணாவுக்கு அருகில் வாழும் மக்களுடனும்அக்கறையுள்ளவர்களுடனும் கலந்துரையாடல்கள் நடாத்தப்பட்டு அவர்களது கருத்துக்களும் உள்வாங்கப்பட வேண்டும். ஒதுக்கப்பட்ட நிதியில் ஒவ்வொரு ரூபாவும் ஆக்கபூர்வமாக செலவு செய்யப்பட வேண்டும் எனவும் கோரியுள்ளார்;.
மேலும் இத் தோணா காரைதீவு பிரதேசத்துடன் தொடர்பு பட்டுள்ளதால் காரைதீவு பிரதேச சபை, காரைதீவு பிரதேச செயலாளர் ஆகியோருடனும் கலந்துரையாடி இன நல்லுறவுக்கு பங்கமேற்படாது திட்டங்களைச் செயற்படுத்த வேண்டும் எனவும் ச் செய்தியில குறிப்பிடப்பட்டுள்ளது.


0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top