சவூதி கூட்டுப்படைகள் விமான தாக்குதலில்
ஏமன் நாட்டில் 60 பேர் பலி
ஏமன்
நாட்டில், சிறை
வளாகத்தில், சவூதி கூட்டுப்படைகள்,
விமானம் மூலம்
குண்டு வீசி
தாக்குதல் நடத்தியதில்,
60 கைதிகள் கொல்லப்பட்டனர் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்திகள் வெளியிட்டுள்ளன..
மேற்கு
ஆசிய நாடுகளில்
ஒன்றான ஏமனில்,
ஜனாதிபதி மன்சூர் ஹாதியின் படைகளுக்கு
எதிராக போரிட்டு
வந்த ஹவுதி
போராளிகள், தலைநகர் சனாவை, 2014ல் கைப்பற்றினர்.
இங்கு, ஜனாதிபதி
ஆதரவு படைகளுக்கும்,
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும்
இடையே தொடர்ந்து
சண்டை நடக்கிறது.
இதில், ஜனாதிபதி
மன்சூர் ஹாதிக்கு
ஆதரவாக சவூதி அரேபியா
தலைமையிலான கூட்டுப்படை தாக்குதல் நடத்தி வருகிறது.
இந்நிலையில்,
ஜனாதிபதி ஆதரவு
படையினருக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும்
இடையேயான, 72 மணி நேர சண்டை நிறுத்தம்,
சமீபத்தில் முடிந்தது. இதையடுத்து, ஹூதாய்தா என்ற
இடத்தில், சிறை
வளாகத்தின் மீது, சவூதி கூட்டுப்படையினர், அடுத்தடுத்து, விமானங்கள்
மூலம் குண்டு
வீசி தாக்குதல்
நடத்தினர். இதில், 60 கைதிகள் உயிரிழந்தனர்; பலர்
படுகாயம் அடைந்தனர்.
அவர்கள் மருத்துவமனையில்
அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அமெரிக்காவின்
ஆதரவுடன் ஆட்சி
நடத்தி வந்த
ஜனாதிபதி மன்சூர்
ஹாதியை, ஈரான்
ஆதரவு பெற்ற
ஹவுதி கிளர்ச்சியாளர்கள்,
2014ல் ஆட்சியில்
இருந்து விரட்டினர்;
அவர், சவூதி அரேபியாவில்
தஞ்சமடைந்தார். இதையடுத்து, ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக, சவூதி தலைமையில், ஐக்கிய அரபு
எமிரேட்ஸ், குவைத், ஜோர்டான், எகிப்து உள்ளிட்ட
ஒன்பது நாடுகள்
களமிறங்கின.இந்த தாக்குதலில், ஏமனில், அப்பாவி
பொதுமக்கள் தொடர்ந்து கொல்லப்பட்டு வருகின்றனர். இதுவரை,
10 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்;
30 லட்சம் பேர்
இடம் பெயர்ந்துள்ளனர் எனத்
தெரிவிக்கப்படுகின்றது.
0 comments:
Post a Comment