பாகிஸ்தான் பிரதமராவதே என் லட்சியம்
சார்ஜாவில் நோபல் பரிசு பெற்ற மலாலா பேச்சு


பாகிஸ்தான் பிரதமராவதே என் லட்சியம் என்று நோபல் பரிசு பெற்ற மலாலா பேசியுள்ளார்.

மத்திய கிழக்கு நாடுகளின் எதிர்கால முதலீட்டு அமைப்பு சார்பில் சிறப்பு .நா கருத்தரங்கம் சார்ஜாவில் நேற்று நடந்தது. சார்ஜா ஆட்சியாளர் டாக்டர் ஷேக் சுல்தான் பின் முகம்மது அல் காஸிமி, அவரது மனைவியும் பெண்கள் மேம்பாட்டுதுறை தலைவருமான ஷேக்கா பின்த் முகம்மது அல் காஸிமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த கருத்தரங்கில் உலக அளவில் பெண்கள் கல்வி மற்றும் முன்னேற்றங்களுக்கு போராடியதற்காக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற பாகிஸ்தானை சேர்ந்த மலாலா கலந்து கொண்டார். அவர்பாலின சமநிலை மற்றும் பெண்கள் முன்னேற்றம்என்ற தலைப்பில் உரையாற்றினார். அப்போது மலாலா பேசியிருப்பதாவது:-

இளம் வயதில் பெண்கள் படித்து வேலைக்கு சென்று ஆண்களுக்கு நிகராக சமூகத்தில் சம அந்தஸ்து பெற வேண்டும். இது வெறும் புத்தகத்தை படித்தால் மட்டுமே மாற்றத்தை கொண்டு வர முடியாது. சமூகத்தில் உள்ள அனைவரும் பெண்களை சுதந்திரமாக செயல்பட ஆதரவு அளிக்க வேண்டும்.

தற்போது அரபு நாடுகளில் நிறைய மாற்றங்கள் நிகழ்ந்து வருவது குறித்து மகிழ்ச்சி அடைகிறேன். பல்வேறு துறைகளில் உயர் பதவிகள் மற்றும் விளையாட்டு வீராங்கனைகளாக பெண்கள் உள்ளதை பார்க்கும் போது பிரமிப்பு ஏற்படுகிறது.

நான் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோவை முன்மாதிரியாக எடுத்துள்ளேன். அவரைப்போல பாகிஸ்தானின் பிரதமர் ஆவதே எனது லட்சியம். அவ்வாறு நான் பிரதமரானால் பெண் கல்விக்கு முக்கியத்துவம் அளித்து உலக நாடுகளில் பாகிஸ்தானை ஒரு முன் மாதிரி நாடாக திகழச் செய்வேன்.


மருத்துவ துறையில் சேர்ந்து படிக்க வேண்டும் என்பது எனது இன்னொரு லட்சியமாக இருந்தது. ஆனால் தற்போது அதை மாற்றிக்கொண்டு சமூகத்தில் நடைபெறும் சீர்கேடுகளை தட்டி கேட்பதும் அதற்காக போராடுவதுமாக எனது லட்சியத்தை மாற்றிக்கொண்டுள்ளேன்.இவ்வாறு மலாலா பேசியுள்ளா.

0 comments:

Post a Comment

 
மக்கள் விருப்பம் - MAKKAL VIRUPPAM © 2014. All Rights Reserved. Designed by Abdul Basith
Top