அமெரிக்க ஜனாதிபதிதேர்தலுக்கான இறுதி விவாதம்
ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுபவர் யார்?
அமெரிக்க ஜனாதிபதித் தேர்தல், அடுத்த மாதம் முதல் வாரத்தில் நடக்கவுள்ளது; இதில், ஜனநாயக கட்சி சார்பில், முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி, 68, போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, பிரபல தொழில் அதிபர் டொனால்டு டிரம்ப், 70, குடியரசு கட்சி சார்பில் போட்டியிடுகிறார். இருவரும், அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஹிலாரி - டிரம்ப் இடையேயான 3வது மற்றும் இறுதி நேரடி விவாதம் இன்று தொடங்கியது. அமெரிக்காவின் லாஸ் வேகஸ் நகரில் நடைபெறும் இந்த விவாதத்தில் சுகாதாரம், பொருளாதாரம், குடியேற்றம் உள்ளிட்ட முக்கியமான 6 அம்சங்கள் அடிப்படையில் விவாதம் 90 நிமிடங்கள் நடைபெறுகிறது. விவாதத்தில் அவர்கள் பேசியதாவது:
ஹிலாரி
ரஷ்யாவுக்கு ஆதரவாக செயல்படுபவர் யார்? ஹிலாரி- டிரம்ப் இடையேயான இறுதி விவாதம்
* துப்பாக்கி வைத்துக்கொள்வதில் கட்டுப்பாடுகள் அவசியம்.* கட்டுப்பாடற்ற துப்பாக்கி விற்பனையால் அதிக உயிரிழப்புகள் ஏற்படுகின்றன.* உச்சநீதிமன்றம் அனைத்து தரப்புகளையும் சமமாக நடத்த வேண்டும்.* உச்சநீதிமன்றம் மக்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும்; பெருநிறுவனங்களுக்கு அல்ல.* டிரம்புக்கு உதவ ரஷ்யா முயற்சி* கருக்கலைப்பு என்பது பெண்கள் தேர்ந்தெடுக்கும் தவறான முடிவு* அமெரிக்கா வேவு பார்க்கப்படுவதற்கு டிரம்ப் வழிவகுக்கிறார்.* அமெரிக்காவுக்கு எதிராக ரஷ்யா சைபர் தாக்குதல் நடத்தி வருகிறது.
டிரம்ப்
* மக்கள் ஆயுதம் வைத்துக் கொள்ளும் உரிமை பாதுகாக்கப்படும்.* ஆயுதங்கள் வைத்துக் கொள்வது தற்காப்புக்கானது.* ஹிலாரி ஆயுதம் வைத்துக் கொள்வதை ஆதரிக்கவில்லை* ரஷ்ய ஜனாதிபதி புடின் என் நண்பரல்ல.* ஒபாமா, ஹிலாரியை விட புடின் சிறப்பாக செயல்பட்டார்
* விக்கிலீக்ஸ் வெளியிட்ட ஆவணங்கள் குறித்து ஹிலாரி பதிலளிக்க முடியுமா? * வரிகளை உயர்த்த ஹிலாரி திட்டம்* கல்வியை மேம்படுத்துவதே எனது திட்டம்.
0 comments:
Post a Comment