சாய்ந்தமருதுக்கு உள்ளுராட்சி சபையை
இதயசுத்தியுடன் பிரகடனப்படுத்திவிட்டு
உள்ளசுத்தி பற்றி அமைச்சர் பைசர் முஸ்தபா பேசியிருக்கவேண்டும்
பத்திரிகையாளர்கள் மத்தியில் அமைச்சர் ஹக்கீம்
சாய்ந்தமருதுக்கு
உள்ளுராட்சிசபையை இதயசுத்தியுடன் பிரகடனப்படுத்திவிட்டு
மற்றவர்களின் உள்ளசுத்தி பற்றி சக அமைச்சர்
பைசர் முஸ்தபா
பேசியிருந்தால் சந்தோஷப்பட்டிருக்கலாம் என ஸ்ரீலங்கா
முஸ்லிம் காங்கிரஸின்
தலைவரும் அமைச்சருமான
ரவூப்
ஹக்கீம் சாய்ந்தமருதில் தெரிவித்துள்ளார்.
அம்பாறை
மாவட்டத்தில் இடம்பெறவுள்ள இஸ்லாமிய தமிழ் இலக்கிய
பொன்விழா தொடர்பான பத்திரிகையாளர்களை தெளிவூட்டும் பத்திரிகையாளர்
சந்திப்பு சாய்ந்தமருது
பரடைஸ் வரவேற்பு மண்டபத்தில்
இன்று ஞாயிற்றுக்கிழமை (2016-10-30) இடம்பெற்றபோது பத்திரிகையாளர்
ஒருவரின் கேள்விக்கு
பதிலளிக்கும்போதே அமைச்சர் ஹக்கீம் இப்படித் தெரிவித்துள்ளார்.
என்னுடைய
நிலைப்பாடு இதயசுத்தியுடன் இருந்ததா? இல்லையா? என்பது தொடர்பில் விளக்கமளிப்பதற்கு அமைச்சர் பைசர் முஸ்தபா தகுதியுடயவாரா? என்ற கேள்வி
தன்னிடமுள்ளது. அரசியல்
காழ்ப்புணர்வு காரணமாக அமைச்சர் பைசர் அவ்வாறானதொரு
கருத்தை முன்வைத்துள்ளார். சாய்ந்தமருது உள்ளுராட்சிசபை விடயமாக
தாங்கள் மூன்று
முறைகளுக்கு மேல் சந்தித்துள்ளோம். இதன்போதெல்லாம் சந்தர்ப்பம்
வரும்போது குறித்த
பிரகடனத்தை செய்வதாக எங்களிடம் கூறிவிட்டு இவ்வாறான
கருத்துக்களை வெளியிடுவது அரசியல் காழ்ப்புணர்வுவின் காரணமாகவிருக்கலாம்.
துறைசார்ந்த
அமைச்சர் சகல
அதிகாரங்களும் அவரது கையில் இருக்கின்ற நிலையில் அவர் செய்துவிட்டு இங்கு வந்து பேசியிருந்தால்
தான் சந்தோசப்பட்டிருப்பேன். ஆனால், இது விடயாமாக எந்த
நடவடிக்கையும் எடுக்காது இங்கு வந்து தன்னை
வம்புக்கு இழுத்து மக்கள் மத்தியில் பேசிவிட்டு சென்றிருப்பது
அவரது பக்குவமில்லாத
பண்பைக்காட்டுகின்றது இவ்வாறு அமைச்சர் ரவூப்
ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment