தலைவர் அஷ்ரஃபின் மரணத்தை விசாரித்த
ஆணைக்குழுவின் அறிக்கையை வெளியிட வலியுறுத்தி
கையெழுத்து சேகரிப்பும் பொதுக் கூட்டமும் நாளை ஏறாவூரில்
2000ஆம் ஆண்டு செப்டம்பர் 16ஆம்
திகதி ஹெலி
விபத்தில் உயிரிழந்த
முஸ்லிம் காங்கிரஸின்
ஸ்தாபகரும் முஸ்லிம் சமூகத்தின் முதுசமுமான மர்ஹும்
அஷ்ரஃப் அவர்களின்
மரணத்தில் ஏதும்
சூழ்ச்சிகளோ சதிகளோ உள்ளதா என்பதை ஆராய்வதற்காக
முன்னாள் ஜனாதிபதி
சந்திரிக்கா அவர்களால் ஆணைக்குழு நியமிக்கப்பட்டது . ஆயினும் 16 வருடங்கள் கடந்தும் இந்த
ஆணைக்குழுவின் விசாரணைகள் தொடர்பிலான தகவல்கள் மூடு
மந்திரமாகவே இருந்து வருகின்றது , வெறும் விபத்தாக
இது இருந்திருந்தால்
இந்த அறிக்கையை
வெளியிடத் தயங்குவதன்
மர்மம் என்ன
? இதுவே அவரது
மரணத்தில் சூழ்ச்சிகள்
நடந்தேறி உள்ளது
என்பதற்கு போதுமான
சான்றாக இருக்கிறது.
அந்த
வகையில் தலைவரின்
மரணம் தொடர்பான
மர்ம முடிச்சுக்கள்
அவிழ்க்கப்பட்டு 16 ஆண்டுகளாக ஜனாதிபதியின்
அலுவலகத்தில் சூட்சுமமான முறையில் முடக்கி வைக்கப்பட்டுள்ள
விசாரணை அறிக்கையை
பகிரங்கப்படுத்துமாறு கோரி குறைந்தது
இரண்டு லட்சம்
மக்களின் கையொப்பங்களை
சேகரித்து இன்றைய
நல்லாட்சி அரசின்
ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கும் வேலைத்திட்டம் கிழக்கில்
முன்னெடுக்கப்பட உள்ளது .
குறித்த
கையெழுத்துக்களை சேகரிக்கும் நடவடிக்கை தலைவர் அஷ்ரப்
அவர்களின் பிறந்த
தினமான (23-10-2016) நாளை ஞாயிற்றுக்கிழமை
ஏறாவூர் பிரதான
வீதியில் உள்ள
தாருஸ்ஸலாம் முன்றலில் பிற்பகல் 4மணிக்கு ஆரம்பித்து
வைக்கப்பட உள்ளதுடன்
அன்று மாலை
7மணியளவில் ஏறாவூர் வாவிக்கரை பூங்கா பகுதியில்
ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸின் தேசிய தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான
பஸீர் சேகுதாவுத்
அவர்களின் சிறப்புரையும்
இடம்பெற உள்ளதாக ஏறாவூர் பிரதேசத்தில்
விநியோகிக்கப்பட்ட துண்டுப் பிரசுரத்தில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment